திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மணிரத்தினம் படமான்னு பயந்து ஓடும் ஹீரோ.. சென்டிமென்ட் பார்த்து நொந்து போகும் வாரிசு நடிகர்

The lead actor who quit Mani Ratnam’s Thug life: மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் காலம் கடந்து சென்றாலும் நிலைத்து நிற்கும் தன்மை உடையவை. 33 வருடங்களுக்கு முன்பு மணிரத்தினம் மற்றும் கமல் இணைந்த நாயகன் திரைப்படம் வெளிவந்த புதிதில் பெரிதொரு மாற்றத்தை ஏற்படுத்தாது போனாலும் இன்றுவரை அப்படத்தை பற்றி பேசாத சினிமா ஆர்வலர்கள் இல்லை. 

தமிழ் சினிமாவில் முதல் தரமான கேங்ஸ்டர் திரைக்கதையை பதிவு செய்த பெருமை மணிரத்தினத்தையே சாரும். காதல், காமம், கண்ணியம் துரோகம், இரக்கம் என அனைத்து உணர்வுகளுக்கும் புதுவித கோணத்தை கொடுத்து திரை உலகை திரும்பிப் பார்க்க வைப்பார் மணிரத்தினம். 

“யாக்கை திரி, காதல் சுடர்” என்று காதலை உலகமயமாக்கவும் “வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை” என்று வீரத்தையும் சரிசமமாக கலந்து புதியதொரு படைப்பை உருவாக்குவார் இந்த கலா ரசிகர். இதே காம்பினேஷன்னில் பல வருடங்கள் கழித்து உலக நாயகன் கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் தக்லைஃப் படத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். 

Also read: மணிரத்தினம் படத்தில் நடிப்பதற்காக 3 பட வாய்ப்புகளை தூக்கிப்போட்ட நடிகை.. 96 இயக்குனரை நிராகரித்த கொடுமை

மணிரத்தினம் பெருமுயற்சிகளுக்குப் பின் தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி வசுலையும் அள்ளிக் குவித்தார். பொன்னியின் செல்வனில் நடித்த நடிக, நடிகைகள் சிலர் கமலின் தக்லைஃப்பிலும் இணைந்தனர். அதுபோக ஓகே கண்மணியில் இணைந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் இதில் நடிக்க ஒப்பந்தமானார். 

தற்போது திடீரென்று துல்கர் தக்லைஃப்பில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். காரணம் மணிரத்தினம் படத்தில் நடிக்க பயமாயிருக்கு. அதாவது செக்கச்சிவந்த வானம் போல மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சா இதுக்கு அப்புறம் ஸ்கோப் இல்லாமல் போய்விடும் என்பது போல் கூறி வருகிறாராம். 

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷாவுக்கு மார்க்கெட் தூக்கி விட்டாலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி இவங்களுக்கு அதுக்கப்புறம் வந்த படம் எல்லாமுமே பிளாப் கார்த்திக்கு ஜப்பானும் ஜெயம் ரவிக்கு சைரன் அதுபோக விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் வெளிவரல. இதனால் எல்லாத்தையும் சேர்த்து குழப்பி அப்செட் ஆகி விட்டாராம்  துல்கர்.

மேலும்  இதன் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால்  துல்கர் சல்மானின் கால்ஷீட் பிரச்சனையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாவது படம் அல்ல காலாகாலத்துக்கும்  நின்னு பேசும் காவியம் என்பதை உணராமல் அலட்சியப்படுத்துகிறார் துல்கர். இதைப்பற்றிய காரணங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆயினும் துல்கர் விலகுவது உறுதியானது.

Also read : ஒரே மாதத்தில் ஓடிடி-க்கு வந்த துல்கர் சல்மான் படம்.. அமுல் பேபி மூஞ்சிக்கு செட்டாகாத கேரக்டரால் பல கோடி நஷ்டம்

Trending News