புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சினிமாவில் இருப்பதால் மகள் சாராவுக்கு ஏற்பட்ட வலி.. கண் கலங்கிய விஜே அர்ச்சனா

சின்னத்திரையில் டாப் பெண் தொகுப்பாளர் லிஸ்டில் இருக்கும் விஜே அர்ச்சனா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பல ரசிகர்களின் மனதை தனது துருதுருவென பேசினாலும் நிகழ்ச்சியை கலகலப்பாக வைத்திருப்பதன் மூலம் பெற்றார்.

பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்ற அர்ச்சனா, அதன்பின் விஜய் டிவியில் முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிறகு ஜீ தமிழுக்கு மறுபடியும் விஜய் டிவியில் இருந்து சென்ற அர்ச்சனா தற்போது மகள் சாராவுடன் இணைந்து மீண்டும் சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: பாத்ரூம் ட்ரோலை விட நல்ல செய்யறாங்க.. மனவேதனையில் அர்ச்சனா

இவரது மகள் சாராவையும் தொகுப்பாளினியாக மாற்றியிருக்கும் அர்ச்சனா, மனவருத்தத்துடன் சாரா குறித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பள்ளி படிக்கும் சாரா திரைத்துறையில் இருப்பதினாலே அவருக்கு நண்பர்களே கிடையாது. வாழ்க்கையில் ஒருவரை நல்வழிப்படுத்துவது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களுடன் தான்.

ஆனால் அந்த பாக்கியம் சாராவுக்கு இல்லாமல் போனது. இதுதான் எனக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்கலங்கி அர்ச்சனா பேசினார். சாரா அதற்கு, ‘எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் அம்மா தான் என்னுடைய சிறந்த நண்பன். நான் வருத்தத்தில் இருக்கும் போது என்னுடைய அம்மாவின் தோள்மீது சாய்ந்ததால் அழுவேன்.

Also Read: அந்த விஷயத்தில் அம்மாவை மிஞ்சிட்டீங்க போல.. அர்ச்சனா மகளை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்!

தன்னுடைய அம்மாவையே நண்பனாக சாரா நினைப்பதாக பேசியதை கேட்ட பின்பு, மேலும் அர்ச்சனா கண்கலங்கினார். சோசியல் மீடியாவில் சில சமயம், சாரா வயதுக்கு மீறி பேசுகிறார் என்று நெட்டிசன்கள் திட்டுவதுண்டு. சாராவும் அவ்வபோது தன்னை ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் சாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அந்த படத்திற்கு பிறகு சாரா கதாநாயகி ரேஞ்சுக்கு தன்னை கற்பனை செய்துகொண்டு அவ்வபோது வித்தியாச வித்தியாசமான போட்டோக்களை பதிவிட்டு சினிமாவிலும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: தே*** மு***ன்னு திட்டுறாங்க.. கண்ணீர் விட்டு கதறும் பிக்பாஸ் அர்ச்சனா

அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவார்கள். இவர்களுக்கென்றே இன்ஷா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால் அர்ச்சனா தற்போது கண்கலங்கி அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

Trending News