வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்த தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

Jailer Movie: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ஜெயிலர். இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் முதல் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் விரைவில் ஆடியோ லான்ச் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்த சூழலில் ஜெயிலர் படத்தால் தான் இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த அனைத்து சொத்தையும் இழந்து விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் ரஜினி மனசு வைத்தால் மட்டுமே நான் இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதாவது ஒரே பெயரில் நிறைய படங்கள் வெளியாவது சர்வசாதாரணம்தான்.

Also Read : மாலத்தீவில் ரஜினி போட்ட சீக்ரெட் மீட்டிங்.. மொத்த நிம்மதிக்கும் உலைவைக்கும் குடும்பம்

ஆனால் முதல் முறையாக ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் அதே நாளில் கேரளாவில் சக்கீர் மடத்தில் என்பவர் இயக்கி, தயாரித்திருக்கும் ஜெயிலர் படமும் வெளியாக இருக்கிறது. மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதாவது 5 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்.

இதற்காக அவருடைய வீடு மற்றும் மகளின் நகைகள் மற்றும் கார் ஆகியவற்றை விற்று தான் இந்த படத்தை எடுத்திருக்கிறாராம். அதோடு மட்டுமல்லாமல் போதாக்குறைக்கு வங்கியிலும் கடன் வாங்கி உள்ளதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் பான் இந்திய மொழி படமாக வெளியாக இருக்கிறது.

Also Read : ஒட்டுமொத்த ஆரவாரத்திலும் தீயை வைத்த ஜுஜூபி.. ஆடியோ லான்ச், ட்ரெய்லரை மலைபோல் நம்பும் ரஜினி

ஆகையால் மலையாளத்திலும் இப்படம் வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சக்கீர் மடத்தில் கேரளாவில் மட்டும் ஜெயிலர் படத்தின் டைட்டிலை மாற்றி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவருடைய படம் மலையாளத்தில் மட்டும்தான் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் பெயரை மலையாளத்தில் மாற்ற சன் பிக்சர்ஸ் மறுத்து விட்டதாம். இதனால் மன வேதனையுடன் பேசிய அந்த தயாரிப்பாளர் நானும் ரஜினியின் தீவிர ரசிகன். அவருடைய படத்தை பார்க்க தான் நானும் முதலில் விருப்பப்படுகிறேன். மேலும் ரஜினி நல்ல மனிதர் என் கஷ்டத்தை புரிந்து கொண்டு ஜெயிலர் டைட்டிலை மாற்றுவார் என எதிர்பார்க்கிறேன். என்னுடைய எதிர்காலமே இந்த ஒரு படத்தில் தான் இருக்கிறது என்றும், சில சமயங்களில் தற்கொலை செய்யவும் நினைத்திருக்கிறேன் என்று பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

Also Read : விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

Trending News