புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வடிவேலு படத்திற்கு வந்த சோதனை.. பீஸ்ட், டாக்டர் படத்தை தொடர்ந்து வைரலாகும் ட்ரெண்ட்

வடிவேலுக்கு ரெட் கார்டு தடை நீங்கிய பிறகு தற்போது மீண்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் வடிவேலுடன் பிக்பாஸ் சிவானியும் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் 4 முதல் 6 பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெறும். பாடல்களுக்காகவே சில படங்கள் ஹிட்டான அதையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது படத்தின் நீளம் அதிகமாக உள்ளதால் பாடல்களை குறைத்துக் கொண்டே வருகின்றனர். தற்போது சில படங்களில் இரண்டு 2 அல்லது 3 பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது. அதுவும் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் டாக்டர் படங்களில் பாடல்கள் அதிக அளவில் இடம் பெறவில்லை.

குறிப்பாக படம் முடிந்த பிறகு தான் ஒரே ஒரு பாட்டை வைக்கின்றனர். அந்தப் பாட்டையும் ஒரு ப்ரோமோ சாங் போல் பயன்படுத்துகிறார்கள். அதாவது சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் இடம்பெற்றிருந்த செல்லம்மா பாடல் படம் முடிந்தவுடன் கடைசியில் தான் வரும்.

அதேபோல் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திலும் ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பிறகு தான் வந்தது. ஆனால் இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இதையே ஒரு யுக்தியாக நெல்சன் கையாண்டு வருகிறார்.

இந்நிலையில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஒரே ஒரு பாடல்தான் உள்ளதாம். அதுவும் படம் முடிந்த பிறகு வடிவேலு, சிவானி இருவரும் நடனமாடும் பாடலாக எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்தப் பாடலையும் ப்ரோமோ பாடலாக பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Trending News