புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பீஸ்ட் இரண்டாம் பாகம் வாய்ப்பு இருக்கா.. நெல்சன் கூறிய பதில்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியானது. முதல் முறையாக நெல்சன், விஜய் கூட்டணி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அதேபோல் இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. ஆனால் பீஸ்ட் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தயாரிப்பு நிறுவனத்தில் கூறப்படுகிறது.

சிலர் பீஸ்ட் படம் தோல்விக்கு முக்கிய காரணம் கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீஸ் தான் என கூறுகின்றனர். ஏனென்றால் எப்பயாவது வெளியாகும் இது போன்ற பிரம்மாண்ட படத்துடன் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ததால் தான் இப்படம் வெற்றி பெறவில்லை என விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

நெல்சன் தற்போது தலைவர் 169 படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெல்சன் இடம் பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நெல்சன், பீஸ்ட் படத்தில் விஜய்யின் வீரராகவன் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திற்காக தான் உருவாக்கினோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சம்மதித்தால் கண்டிப்பாக பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என நெல்சன் தெரிவித்தார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் நெல்சனை விமர்சித்து வருகிறார்கள். நீங்கள் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் எடுங்கள். ஆனால் எங்கள் தளபதி விஜய் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. தயவுசெய்து விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க வேண்டாம் என ரசிகர்கள் கெஞ்சி உள்ளனர்.

Trending News