Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நயன்தாராவை கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்.. கல்யாணமானதிலிருந்தே மவுசை இழக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாராவை கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்.. கல்யாணமானதிலிருந்தே மவுசை இழக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

சினிமா வாழ்க்கையை பொருத்தவரையில் அவருக்கு அடி மேல் அடி விழுகிறது கல்யாணம் ஆனதிலிருந்தே மவுசு குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

நயன்தாராவுக்கு இந்த வருடம் சொந்த வாழ்க்கையை பொருத்தவரை சிறப்பாக தான் இருக்கிறது. பல ஆண்டுகள் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டது முதல் இரட்டை குழந்தைகளுக்கு தாயானது வரை அனைத்திலும் அவர் நினைத்ததை நடத்தி காட்டி இருக்கிறார். ஆனால் சினிமா வாழ்க்கையை பொருத்தவரையில் அவருக்கு அடி மேல் அடி விழுகிறது.

அந்த வகையில் அவருக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே மவுசு குறைந்துவிட்டது என்று சொல்லலாம். பெரும்பாலும் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். கமர்சியல் படங்களில் நடித்தாலும் சிறு பட்ஜெட்டில் பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் இப்போது அவருக்கு போட்டியாக பல நடிகைகள் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். ஆனால் நயன்தாரா அளவுக்கு அவர்கள் அந்த கதைக்கு உயிர் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. நயன்தாரா ஆரம்பித்து வைத்த அந்த டிரெண்டை இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் பின்பற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இருவரும் தான் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு போட்டி போட்டு வருகின்றனர். அதில் ஆண்ட்ரியாவுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. எப்படி என்றால் நயன்தாரா நடிக்க இருந்த ஒரு திரைப்படம் தற்போது அவர் கைக்கு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் படுதோல்வி தான்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது வசூலில் பெரும் நஷ்டம் அடைந்திருக்கிறது. அதனாலேயே இப்போது நயன்தாராவை வைத்து அறம் என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நயனார் ஆண்ட்ரியா பக்கம் திரும்பி இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் நயன்தாராவின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது.

அதனாலேயே இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைய இருந்தது. இதுவும் பெண்களை போற்றும் விதமாக இருக்கும் கதை தான். மேலும் இயக்குனர் நயன்தாராவை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். ஆனால் இப்போது நயன்தாராவின் மார்க்கெட் தத்தளித்து வருவதால் அவரை விட்டுவிட்டு ஆண்ட்ரியாவை தேர்ந்தெடுத்து விட்டாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு இருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.