சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மொத்த ஸ்டேஜையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த சூப்பர் ஸ்டார்.. ஜெயிலரால் எகிறிய சன் டிவியின் டிஆர்பி

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் பற்றிய பேச்சு தான் இப்போது சோஷியல் மீடியாவை ஆதிக்கம் செய்து வருகிறது.

அதிலும் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் முழு எனர்ஜியை பார்த்தவர்கள் சொல்ல முடியாத ஆச்சரியத்தில் இருக்கின்றனர். 72 வயதிலும் இளைஞர் போல் இருக்கும் இவருடைய சுறுசுறுப்பும், ஸ்டைலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Also read: பல வருடத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் செய்த அக்கப்போர்.. முட்டுக்கொடுத்து காப்பாற்றும் திரையுலகம்

அதிலும் விழா மேடையில் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எனர்ஜி குறையாமல் பேசிய பேச்சு ரசிகர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களை கூட ஆச்சரியப்படுத்தி விட்டது. அதனாலயே இந்த நிகழ்ச்சியை டிவியில் காண்பதற்காக பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த வகையில் நேற்று சன் டிவி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை சேனலில் ஒளிபரப்பு செய்தது. அதுதான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டி கதை, மேடையில் செய்த பெர்ஃபார்மன்ஸ் என அனைத்தும் வேற லெவலில் இருந்தது.

Also read: நண்பனுக்காக தயாரிப்பாளராகும் நெல்சன்.. எல்லாம் ஜெயிலர் கொடுக்குற தைரியம்

இன்னும் சொல்லப்போனால் இந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாரை கலகலப்பாக யாரும் பார்த்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர் பேசினாலும் இன்னும் பேசு தலைவா என்று தான் ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய பேச்சு சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் இருந்தது.

அதனாலேயே இப்போது சன் டிவியின் டிஆர்பியும் எகிறி இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த சன் டிவி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு வேறு எந்த மீடியாக்களையும் அழைக்கவில்லை. நிச்சயம் நிகழ்ச்சி வேற லெவலில் வெற்றி பெறும் என்பதை மனதில் வைத்தே இப்படி ஒரு பிளான் போட்ட தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இப்போது கல்லா கட்டி இருக்கிறது.

Also read: பல வருடங்களுக்குப் பின் எக்ஸ் காதலனை சந்தித்த ஈஸ்வரி.. அதிர்ச்சியில் குணசேகரனுக்கு வந்த நெஞ்சு வலி

Trending News