திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாறன் தயாரிப்பில் ரஜினி நடித்த 4 படங்களின் மொத்த வசூல்.. சுக்கிர திசையை தன்வசம் வைத்திருக்கும் சன் பிக்சர்ஸ்

Actor Rajini 4 Movies Collection:  கடந்த கொஞ்ச நாட்களாகவே அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் தான். இப்படம் இவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலதரப்பட்ட ரசிகர்களும் பார்த்து என்ஜாய் பண்ணும் விதமாக பக்கா மாஸாக நடித்திருக்கிறார். இப்படித்தான் எங்கள் தலைவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று மெய்சிலிர்த்து பேசி வருகிறார்கள்.

அந்த அளவிற்கு ஜெயிலர் படம் வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தை இயக்கிய நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கலாநிதிக்கும் மிகப்பெரிய வரவேற்பும் அதிக லாபமும் கொடுத்திருக்கிறது. கலாநிதி தயாரிப்பில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ரஜினி படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை கிடைத்துவிடும்.

Also read: கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சி கேட்ட ரஜினி.. சுத்தமாகவே கண்டு  கொள்ளாத பக்தர் செய்த மட்டமான வேலை

அந்த வகையில் ரஜினி என்கிற சுக்கிர திசையை மொத்தமாக குத்தகை எடுத்துவிட்டார் கலாநிதி மாறன். இவருடைய தயாரிப்பில் ரஜினி நடித்த 4 படங்களும் வசூல் ரீதியாக வாரி வழங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். அதில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது.

இதுவரை இந்தியாவிலேயே அதிக பொருட்செளவில் எடுக்கப்பட்ட படமாக கருதப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அத்துடன் 2010 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக ஆனது. இப்படத்தின் மொத்த வசூல் 370 கோடி பெற்றிருக்கிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு பேட்ட திரைப்படம் வெளிவந்தது.

Also read: ரஜினிக்காக ஓடிவந்த சிவராஜ்குமார், மோகன்லால்.. ஜஸ்ட் மிஸ் ஆன பாலய்யா

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், 240 கோடியை வசூல் செய்து அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக லாபத்தை கொடுத்தது. இதற்கு அடுத்து சிவா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் ரஜினிக்காக இப்படம் வசூல் ரீதியாக 150 கோடியை பெற்று கொடுத்தது.

இதனை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு முன் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களிடம் இருந்து அதிகமான வரவேற்பை பெற்று ஆரவாரத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரிலீசான மூன்று நாள் மட்டுமே ஆன நிலையில் மொத்தமாக கிட்டத்தட்ட 220 கோடியை நெருங்கி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது இன்னும் பல மடங்காக லாபத்தை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ரஜினியை வைத்து கலாநிதி மாறனுக்கு சுக்கிர திசை அடித்துவிட்டது என்று சொல்லலாம்.

Also read: வெறும் வாய்க்கு மெல்ல அரிசி அவல் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. ரஜினி செய்த மோசமான தவறு

Trending News