Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

KGF பட நடிகை வீட்டில் சடலமாக மீட்பு, அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்.. என்ன நடந்தது?

KGF பட நடிகை வீட்டில் சடலமாக மீட்பு, அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்.. என்ன நடந்தது?

32 வயது இளம் நடிகை சோபிதா சிவன்னா வீட்டில் சடலமாக கண்டுடெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015- ல் ரிலீஸான ரங்கா தாரங்கா படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா. இதையடுத்து, யூடர்ன் என்ற திரில்லர் […]

32 வயது இளம் நடிகை சோபிதா சிவன்னா வீட்டில் சடலமாக கண்டுடெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015- ல் ரிலீஸான ரங்கா தாரங்கா படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா. இதையடுத்து, யூடர்ன் என்ற திரில்லர் படத்தில் நடித்தார். தொடர்ந்து, கன்னட சினிமாவில் நடித்து வந்த சோபிதாவுக்கு பல படங்கள் ஹிட்டாகின.

ராக்கி பாயின் கேஜிஎஃப் படங்களிலும் நடித்துள்ளர். இப்படி சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த சோபிதா, கன்னத்தில் பிரபல மங்கல கெளரி, கிருஷ்ணா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஃபேசன் டெக்னாலஜி படிப்பு முடித்துவிட்டு, சினிமாவில் மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானார். சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கணவருடன் ஒன்றாக வசித்த நிலையில் சடலமாக மீட்பு!

இவர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் ஐதராபாத்திற்குச் சென்றார். அங்குள்ள கொண்டாபூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்து வந்தார். அங்கு குடியேறி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலை முடிந்து வீட்டுகு வந்த கதவை தட்டியுள்ளார் சுதீர். அப்போது கதவு திறக்கவில்லை. சிலர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த அனைவரும் போலீஸுக்கு தகவல் கூறினர்.

அவரது உடலை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

shobitha-kgf
shobitha-kgf
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.