புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனை நம்பி பிரயோஜனம் இல்லை.. அதிகமான பல கோடி பட்ஜெட், கழுவுற மீன்ல நழுவ பார்த்த கமல்

Kamal and Sk 21: சந்தர்ப்பம் நமக்கு சாதகமாக இருக்கும் போது சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப கமலுக்கு விக்ரம் படத்தில் கிடைத்த ஜாக்பாட் மூலம் அடுத்தடுத்து நடிப்பிலும் தயாரிப்பிலும் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டு வருகிறார். அதனால் இளம் நடிகர்களின் படத்தை தயாரிப்பதில் அதிக ஆர்வத்தை காட்ட ஆரம்பித்தார்.

அதனால் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் SK21 படத்தை தயாரிக்க முன் வந்தார். அத்துடன் தயாரிப்பில் முதன் முதலாக களமிறங்கிய சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கப் போகிறார்கள். மேலும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சாய் பல்லவி ஹீரோயினாக கமிட்டாய் இருக்கிறார். இப்படத்தை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்பரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக போடப்பட்ட பட்ஜெட்டையும் தாண்டி கிட்டத்தட்ட 25 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் கமல் அப்படியே இதிலிருந்து நைசாக விலகிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார். அதனால் ஒட்டுமொத்தமாக இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை சோனி நிறுவனத்திடம் ஒப்படைத்து விடலாம் என்று நினைத்தார்.

Also read: 70 வயதிலும் 30 வயது போல் இளமை மாறாமல் இருக்கும் 5 நடிகர்கள்.. செம ஃபிட்டாக இருக்கும் கமல்

ஆனால் இவருடைய திட்டத்தை புரிந்து கொண்ட சோனி நிறுவனம் இப்படம் துவங்கும் போது போட்டுக் கொண்ட அக்ரிமெண்ட் படி நடந்து கொள்ளுங்கள் என்று உஷாராகி கமலிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் வைத்து ஆரம்பிக்கும் பொழுது அவர் மீது எந்தவித சர்ச்சையும் எழும்பவில்லை.

ஆனால் இப்பொழுது இவருடைய பெயர் நாலா பக்கமும் டேமேஜ் ஆகிவிட்டதால். இனி இவரை நம்பி அதிகப்பணத்தை போடுவது பிரயோஜனமில்லை என்று கமலுக்கு ஒரு பக்கம் தோன்றியிருக்கிறது. அதனால அதிக பட்ஜெட் நம்மளுக்கு சரிப்பட்டு வராது என்று அப்பிட்டாக பார்த்திருக்கிறார். ஆனால் இவருடைய சூழ்ச்சி எல்லாம் சோனி நிறுவனத்திடம் செட் ஆகவில்லை.

அதனால் வேறு வழி இல்லாமல் Sk 21 படத்தை இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தயாரிக்க வேண்டும். இதற்காக படத்தை எப்படியாவது கூடிய விரைவில் முடித்துவிட்டு எவ்வளவு தூரத்துக்கு லாபத்தை பார்க்க முடியுமோ அதை கச்சிதமாக செய்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கணக்கு பார்த்து கச்சிதமாக தயாரித்து வருகிறார்.

Also read: எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருந்த அந்த உறவு.. நடிகையின் மரணத்திற்குப் பிறகு மனம் திறந்த கமல்

Trending News