விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் கமலஹாசன். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர இது தான் காரணம் என்ற செய்தி வியப்புக்குள் ஆழ்த்தி வருகிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த இவர் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்களுக்கு விமர்சனங்கள் பெரியளவு வரவில்லை என்றாலும். அதன் பின் 2013ல் இவர் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் அந்த படங்களின் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 2016ல் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த ரஜினி முருகன் படம் இவருக்கு கமர்சியல் ஹிட் கொடுத்தது. நல்ல விமர்சனங்களை கொண்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 850 மில்லியன் வருவாய் பெற்று தந்தது.
அதன்பின் அதே ஆண்டு வெளிவந்த ரெமோ படத்தில் இவரின் மாறுபட்ட கதாபாத்திரம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இந்த இரு படங்களில் வெற்றியை கொண்டே தன் சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தினார் சிவகார்த்திகேயன்.
Also Read: உதயநிதியுடன் ரகசிய கூட்டு வைக்கும் உலகநாயகன்.. நடிக்கும் முன்னரே கமல் காட்டும் வில்லத்தனம்
இதைத்தொடர்ந்து சில படங்கள் வெற்றி பெறாத நிலையில் 2021ல் இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்பட வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை சுமார் 35 கோடியாக உயர்த்திக் கொண்டார். குறுகிய காலத்தில் இவரின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 100 கோடி பெற்று டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற கமர்சியல் படங்களில் ஹிட் கொடுத்த இவர் தன் அடுத்தக்கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். மாவீரன், அயலான் போன்ற படங்களை எதிர் பார்த்து வரும் இவர் மேற்கொண்டு கமல் கூட்டணியில் எஸ்கே 21 என்னும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். மேலும் இவரின் முயற்சியில் இப்படங்களும் இவருக்கு வெற்றி படங்களாக அமையும் என்று ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்