பீஸ்ட் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. பிளான் பண்ணி விஜய்யை மாட்டிவிட்ட நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது பல கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் படத்தைப் பற்றிய நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இப்படம் வசூலிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் படம் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே பல கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இருப்பினும் படத்தின் கதை ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் விஜய்க்காக மட்டும் தான் இந்த படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்திற்கு இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவது அதிர்ச்சியை அளித்தாலும் விஜய் அதையெல்லாம் விடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கதையை நெல்சன் விஜய்க்கு முன்பாக ஒரு பிரபல நடிகரிடம் தான் கூறியிருக்கிறார்.

நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படத்தை அடுத்து பல கதைகளை எழுதி வைத்திருந்தார். இதைப் பற்றி அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறி வந்தார்.

இந்நிலையில் அவர் எழுதி வைத்த அத்தனை கதைகளையும் முதன்முதலில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தான் கூறியிருக்கிறார். அவர்கள் இருவரும் விஜய் டிவியில் இருக்கும் போதிலிருந்தே நண்பர்கள். அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அவர் தன்னுடைய எல்லா கதைகளையும் அவருக்கு கூறியிருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் கதை உட்பட அனைத்து கதைகளையும் கேட்ட சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏனென்றால் டாக்டர் திரைப்படத்தின் கதை மட்டும்தான் ஓரளவிற்கு நன்றாக இருப்பதாக புரிந்து கொண்டு அவர் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். பீஸ்ட் படத்தின் கதையை கேட்ட சிவகார்த்திகேயன் நாசுக்காக டாக்டர் படத்தின் கதைதான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகுதான் நெல்சன் பீஸ்ட் படத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தின் கதையை மறுத்தது குறித்த தகவல் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெல்சன் வேண்டுமென்றே பீஸ்ட் திரைப்படத்தின் கதையை சொதப்பியதாகவும் விஜய் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →