செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

திரிஷாவை காதலித்து கழட்டி விட்ட நடிகர்கள்.. 40 வயதிலும் கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்

பல வருடங்களாக முன்னணி அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இடையில் சில வருடங்கள் பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த இவருக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுத்தது பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரம் தான். அங்கு ஆரம்பித்த அதிர்ஷ்டம் இப்போது அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இப்படி திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டி வரும் திரிஷாவுக்கு 40 வயதான நிலையிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு விஷயத்தை போட்டு உடைத்திருக்கிறார். அதாவது திரிஷாவை சில நடிகர்கள் காதலித்து கழட்டி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read: விஜய்யுடன் நடித்து பாலிவுட்டில் புகழ்பெற்ற 5 ஹீரோயின்கள்.. தளபதிக்கு இப்படி ஒரு ராசியா

அந்த வகையில் திரிஷா நடிக்க வந்த புதிதில் சிம்புவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அவர்களைப் பற்றி பல கிசுகிசுக்கள் கூட வெளிவந்தது. அதை தொடர்ந்து தெலுங்கில் பிரபலமாக ஆரம்பித்த திரிஷாவுக்கு நடிகர் ராணாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக இணைந்து வருவது அப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் காதல் என்றும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் செய்திகள் கூட வெளிவந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த ஜோடி பிரிந்தது. இதற்கு ராணா தான் முக்கிய காரணம் என்றும் த்ரிஷாவை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு கழட்டி விட்டு விட்டார் என்றும் பயில்வான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் லோகேஷ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா? LCU-க்கு அடித்த ஜாக்பாட்

அதைத்தொடர்ந்து திரிஷாவும் சோசியல் மீடியாவில் சிலர் நண்பர்களாக வந்துவிட்டு தன்னை பயன்படுத்துகிறார்கள் என்று மறைமுகமான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த அளவுக்கு மன வருத்தத்தில் இருந்த அவர் அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும் அவர் வீட்டில் பார்த்த வரன்களையும் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார்.

அப்படி ஒரு வெறுப்பில் இருந்த த்ரிஷா ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதித்து நிச்சயதார்த்தமும் செய்தார். ஆனால் அதுவும் பாதியிலேயே நின்று போனது. இதனால் அவருக்கு ஆண்கள் மேலேயே கடும் வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இத்தனை வயதாகியும் கூட அவர் சிங்கிளாக தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார். ஆனாலும் அவர் தன் மனம் கவர்ந்தவருக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Also read: லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

Trending News