Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மீனவனாக மிரட்டும் சூர்யா.. பாலா படத்தின் டைட்டில் இதுதானா.?

மீனவனாக மிரட்டும் சூர்யா.. பாலா படத்தின் டைட்டில் இதுதானா.?

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலா கூட்டணியில் சூர்யா இணைந்துள்ளார். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 41வது படம் ஆகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. […]

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலா கூட்டணியில் சூர்யா இணைந்துள்ளார். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 41வது படம் ஆகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பாலா மற்றும் சூர்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. மேலும் இப்படம் மீண்டும் தொடங்கபடாது டிராப் ஆகிவிட்டது என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் பாலா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில் ஜூன் மாதம் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கயுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 41வது படமான இப்படத்தின் தலைப்பு குறித்த இணையத்தில் பல பெயர்கள் உலாவுகிறது. அதாவது இப்படத்தில் சூர்யா ஒரே மீனவனாக நடிக்கிறார்.

இதனால்தான் கடல் சார்ந்த இடங்களில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வணங்கான், செம்படவன், துறையவன், கடலாடி என பல பெயர்கள் இணையத்தில் உலாவுகிறது. இதில் கடலாடி என்ற டைட்டிலை பாலா கன்பார்ம் செய்ததாக கூறப்படுகிறது.

ஒருவேளை படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமே படத்தின் பெயராக வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் சூர்யா ரசிகர்களும் விக்ரம் படத்திற்காக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.