வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வார டிஆர்பி-யில் கொடிகட்டி பறக்கும் முதல் 6 சீரியல்கள்.. டாப்ல எப்போதும் நாங்கதான்னு அடிச்சு சொல்லும் சேனல்

This Week Top 6 Serial trp Ratings: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியல்களில் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே தான் கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதுலயும் நாங்க தான் டாப்பு என்று பிரபல தனியார் தொலைக்காட்சி கெடுத்துக்காட்டுகிறது.

இந்த லிஸ்டில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் மகாநதி சீரியலும், 9-வது இடத்தில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலும் உள்ளது. முன்பெல்லாம் ஜீ தமிழின் எந்த ஒரு சீரியலும் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் வராமல் திணறியது. ஆனால் இப்போது கார்த்திகை தீபம் சீரியல் முட்டி மோதி முன்னுக்கு வந்துள்ளது. 8-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக மகா சங்கமத்தில் இணைந்த பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 7-வது இடத்தை பிடித்திருக்கிறது. 6-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் உள்ளது.

Also Read: முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

இந்த வார டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கும் டாப் 6 சீரியல்கள்

5-வது இடத்தில் அசுர வேகத்தில் முன்னேறும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை உள்ளது. 4-வது இடத்தை கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரி பிடித்துள்ளது. 3-வது இடத்தில் பாசமான அண்ணன் தங்கையின் கதைக்களத்தை கொண்ட வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது.

2-வது இடத்தில் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கயலின் போராட்டத்தை காண்பித்த கயல் சீரியல் பிடித்துள்ளது. முதல் இடத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே  சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் சில்வண்டு போல் இருந்து சிங்கமாய் சீறிக் கொண்டிருக்கும் ஆனந்தி ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: மருமகள்களுக்காக ஆஜராகும் சாருபாலா.. குணசேகரன் கண்ணில் தெரியும் மரண பயம்

Trending News