செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெளியிலிருந்து சும்மா கேனத்தனமா உளரக் கூடாது.. டென்ஷனாகி உதயநிதி கொடுத்த பதிலடி

தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர். இதனிடையே இவர் பதவியேற்றதிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்கு வினியோகஸ்தர் உரிமையையும் பெற்று படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். இந்த வருடத்தில் மட்டுமே நடிகர் விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான், கமலஹாசனின் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்கு உரிமையை வாங்கி ரிலீஸ் செய்துள்ளார்.

Also Read : படமாக போகும் தமிழக முதல்வரின் வாழ்க்கை.. பக்கா பிளானுடன் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு, உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கியுள்ளார். இதன் காரணமாக ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறாரா என்ற கேள்வி சமீபத்தில் அவரிடமே கேட்கப்பட்டது.

அதற்கு காட்டமாக பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் வாயில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே நாங்கள் விநியோகம் செய்து வருகிறோம். அதை பார்ப்பவர்களுக்கு நாங்கள் தான் எல்லா படங்களையும் வினியோகம் செய்வது போல் இருக்கிறது.

Also Read : துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்

அப்படி வினியோகம் செய்யும் திரைப்படங்களின் வசூலையும் தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்குகளை காண்பித்து கொடுத்து விடுகிறோம். தினம்தோறும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களுக்கு மேல் பார்க்கிறோம். எத்தனையோ திரைப்படங்கள் எடுக்கப்பட்டு இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

அதைப்பற்றி எல்லாம் இங்கு பேச யாரும் கிடையாது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் செய்வது தப்பா தான் தெரியும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுப்படுகிறாரோ, இல்லையோ, அவர் வாங்கும் படங்களின் ப்ரோமோஷன்களுக்கு முதல் ஆளாக மேடையில் அமர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

Trending News