ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

போதைப் பொருளை மையமாக வைத்து வெளியான சிறந்த 10 படங்கள் .. பின்னி பெடல் எடுத்த விக்ரம்

தமிழ் சினிமாவில் வெவ்வேறு கதை களங்களைக் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் போதைப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழில் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிறந்த 10 படங்களில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல பிரபலங்கள் நடித்திருந்த இந்தப் படத்தை போதைப்பொருள் மையமாக வைத்து எடுத்திருப்பார்கள். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

கைதி: கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்தப் படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கினார். இதில் கைதியான கார்த்தி, போதைப்பொருள் கடத்தல் கும்பலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நரேன் உடன் கூண்டோடு அழிப்பது தான் இந்தப் படத்தின் கதை.

அயன்: கேவி ஆனந்த் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு சூர்யா, தமன்னா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் காதல், சென்டிமென்ட், காமெடி, ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையாக படமாக வெளிவந்து ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்திலும் வைரம், தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

சிங்கம்: ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் 3 பாகங்களும் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூன்று பாகங்களும் போதைப் பொருள் கடத்தலை வைத்தே மையமாக எடுக்கப்பட்டிருக்கும்.

சைத்தான்: 2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் போதைப் பொருளை அடிப்படையாகக் கொண்டே படத்தை உருவாக்கியிருப்பார்கள். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

இருமுகன்: நயன்தாரா, விக்ரம் நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். இதிலும் போதைப்பொருள் தான் படத்தின் மையக் கருவாக இருக்கும். 2016ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விக்ரம் இதில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

கோலமாவு கோகிலா: நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் போதைப் பொருளை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள்.

மீகாமன்: மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் மையக்கரு போதைப்பொருள் கடத்தல். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

மாஃபியா: கார்த்தி நரேன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திலும் போதைப் பொருளை சுற்றியே கதை உருவாக்கப்பட்டிருக்கும்.

இப்படி போதைப்பொருள் கடத்தலை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த 10 படங்களில் கடந்த மாதம் திரைக்கு வந்த விக்ரம் படம் தான் சர்வதேச அளவில் 400 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீசை பின்னி பெடல் எடுத்து கொண்டு இருக்கிறது

- Advertisement -spot_img

Trending News