தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களது திரை வாழ்க்கையில் அந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்து இருக்கும். அவ்வாறு சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டது. இவ்வாறு சிவாஜி முதல் கார்த்தி வரை போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படங்களை பார்க்கலாம்.
தங்கப்பதக்கம் : சிவாஜி கணேசன் போலீஸ் அதிகாரி எஸ்பி சவுத்ரியாக நடித்த படம் தங்கப்பதக்கம். இப்படத்தில் அவரது மனைவியாக கே ஆர் விஜயா நடித்திருந்தார். தவறு செய்தது தன் மகனாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என நேர்மையான போலீஸ் அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளிவிழா கண்டது.
மூன்று முகம் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மூன்று முகம். இப்படத்தில் அருண், ஜான், அலெக்ஸ் பாண்டியன் என மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அலெக்ஸ்பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மிரட்டி இருந்தார். மேலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
குருதிப்புனல் : கமலஹாசன், அர்ஜுன், கௌதமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் குருதிப்புனல். இப்படத்தில் கமலஹாசன் ஆதி நாராயணன் என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் அர்ஜுனும் அப்பாஸ் என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆஸ்கர்காக பரிந்துரைக்கப்பட்டது.
வேட்டையாடு விளையாடு : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் டிசிபி ராகவன் ஆக கமலஹாசன் நடித்து இருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதையும் கமலஹாசன் பெற்றார்.
காக்க காக்க : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் காக்க காக்க. இப்படத்தில் சூர்யா ஏசிபி அன்புச்செல்வன் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய துணிச்சலான நடிப்புக்கு பலர் இடத்தில் இருந்து பாராட்டு கிடைத்தது.
சத்ரியன் : மணிரத்தினம் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, பானுப்பிரியா, திலகன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சத்ரியன். இப்படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும் 90 களில் வெளியான படங்களிலேயே சிறந்த படம் என்ற பாராட்டைப் இப்படம் பெற்றது.
கேப்டன் பிரபாகரன் : ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நூறாவது படமாக வெளியானது கேப்டன் பிரபாகரன். இப்படத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டம் கிடைத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது.
சாமி : ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் சாமி. இப்படத்தில் விக்ரம் டிசிபி ஆறுச்சாமி ஆக நடித்திருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் சாமி. இப்படத்தில் தனது புத்திசாலித்தனத்துடன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் விக்ரம். மேலும் இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
என்னை அறிந்தால் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் டிசிபி சத்யதேவ் ஐபிஎஸ்யாக அஜித் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்துக்கு சிறந்த பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
தீரன் அதிகாரம் ஒன்று : எச் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கார்த்தி தீரன் திருமாறன் என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் கொலை வழக்கைக் கையாளவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் நியமிக்கப்பட்டு இருப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது