Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

2022-ல் வசூல் வேட்டை ஆடிய முதல் மூன்று படங்கள்.. ரீ-என்ட்ரினா இப்படி இருக்கணும்

2022-ல் வசூல் வேட்டை ஆடிய முதல் மூன்று படங்கள்.. ரீ-என்ட்ரினா இப்படி இருக்கணும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் எல்லாம் திறக்கப்படாமல் இருந்தது. பெரிய நடிகர்கள் படம் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. அதைத்தொடர்ந்து […]

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் எல்லாம் திறக்கப்படாமல் இருந்தது. பெரிய நடிகர்கள் படம் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அவ்வாறு இந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த மூன்று படங்களை பார்க்கலாம்.

பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இதற்கு முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி இருந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தட்டி தூக்கி முதல் நாளே வசூல் சாதனை பெற்றது.

வலிமை : எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் பீஸ்ட் படத்தைப் போல வலிமை படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் வலிமை படம் முதல் நாளில் வசூலை வாரி குவித்தது.

விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் வெளியாகியுள்ள படம் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் ஏதும் வெளியாகாததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. மேலும் பிரமாண்டமாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் படம் வெளியாகி திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் கமலின் திரை வாழ்க்கையிலேயே முதல் நாள் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையையும் விக்ரம் படம் பெற்றுள்ளது. மேலும் ரீஎன்ட்ரினா இப்படித்தான் இருக்கணும் என கமல் ரசிகர்கள் பெருமை கொண்டுவருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.