ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சமீபத்தில் வில்லன் அவதாரத்தில் அசத்திய 5 நடிகர்கள்.. மக்கள் வெறுத்து ஒதுக்கிய நட்டி நட்ராஜ்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது ஹீரோவாக நடித்த பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைந்துவிடும் என தயங்குவார்கள். ஆனால் ஹீரோவாக நடித்ததை காட்டிலும் தற்போது வில்லனாக மக்கள் மனதில் ஐந்து நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பகத் பாசில் : மலையாள சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் பகத் பாசில். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக அசத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை தொடங்கி கடைசியாக கமலஹாசனின் விக்ரம் படத்திலும் பகத் பாசில் அசத்தியிருந்தார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்தில் பகத் பாசில் மிரட்டியிருந்தார்.

விஜய் சேதுபதி : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஹீரோ, வில்லன் என மாறி மாறி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமலஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.

நட்டி நட்ராஜ் : சதுரங்கவேட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் நட்டி நட்ராஜ். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த நட்டி நட்ராஜ் கர்ணன் படத்தில் தனுஷுக்கு வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்க்கும் மக்களே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார் நட்டி நட்ராஜ்.

வினய் : வினய் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அவரது தோற்றமும், உயரமும் வில்லனுக்கு உண்டான சாயலில் இருப்பதால் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் வினய் வில்லனாக மிரட்டி இருந்தார்.

எஸ்ஜே சூர்யா : பெரும்பான்மையான இயக்குனர்கள் தற்போது வில்லன் கதாபாத்திரம் என்றால் உடனே எஸ்ஜே சூர்யாவை தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவுக்கு வில்லனாக மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்துள்ளார். சிம்புக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக அசத்தியிருந்தார்.

Trending News