திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 5 படங்கள்.. எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி மாஸ் காட்டும் சர்தார்

திரையுலகை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த படங்களின் வசூலை பொருத்து பாக்ஸ் ஆபிஸின் நிலையும் மாறும். அந்த வகையில் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

பிளாக் ஆடம்: அக்டோபர் மூன்றாம் தேதி வெளிவந்த இந்த ஹாலிவுட் திரைப்படம் இப்போது வரை வசூலில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. 195 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை 250 மில்லியனை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Also read : கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

பிரின்ஸ்: அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனினும் இப்படம் இதுவரை 40 கோடி வரை வசூலித்துள்ளது. அந்த வகையில் வார இறுதி பாக்ஸ் ஆபிஸில் பிரின்ஸ் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

காந்தாரா: ரிஷப் செட்டி இயக்கி, நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதை காலத்துடன் வந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்துள்ளனர். வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை 276 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Also read : சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த பின்னும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இப்போது வரை 482 கோடி வரை வசூலித்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த வார பாக்ஸ் ஆபீஸில் பொன்னியின் செல்வன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சர்தார்: பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது. வெளியான ஒரு வாரத்திலேயே இப்படம் 75 கோடி வரை வசூலித்துள்ளது. அந்த வகையில் சர்தார் அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

Also read : யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

Trending News