திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2022ல் ட்ரெண்டான 5 வசனங்கள்.. பட்டி தொட்டியெங்கும் பரிட்சயமான ‘சொல்லுங்க மாமா குட்டி’

ஒரு சில படங்களில் வரும் வசனங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பயங்கர ட்ரெண்ட் ஆகிவிடும். முன்பெல்லாம் டாப் ஹீரோக்களின் பஞ்ச் வசனங்கள் தான் பயங்கரமாக ரீச் ஆகும். ஆனால் இப்போது சமூகவலைதங்களின் ஆதிக்கம் அதிகம் ஆன பிறகு, திடீரென்று ஏதாவது ஒரு வசனம் மீம்ஸ்களின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பயங்கர ட்ரெண்ட் ஆகிவிடும். இந்த வருடத்திலும் இதுபோன்று 5 வசனங்கள் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

லவ் டுடே – சொல்லுங்க மாமா குட்டி: இந்த வருடத்தின் மிகப்பெரிய சென்சேஷன் திரைப்படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே படம் தான். 5 1/2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தின் ‘சொல்லுங்க மாமா குட்டி’ வசனம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரீச்சை அடைந்து இருக்கிறது.

Also Read: அக்கட தேசத்தில் வெளியான லவ் டுடே.. தலைகால் புரியாமல் ரசிகர் செய்த சம்பவம், ஜெர்க் ஆன இவானா

பொன்னியின் செல்வன்- அவளை மறக்கத்தான்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது பொன்னியின் செல்வன் திரைப்படம். வரலாற்று திரைப்படமாக இருந்தாலும் இந்த படம் பலதரப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரம் சொன்ன ‘அவளை மறக்கத்தான்’ வசனமும் இப்போது பயங்கர ட்ரெண்டில் உள்ளது.

விக்ரம் – இந்த மாதிரி நேரத்துல வீரன்களாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா த்தா பார்த்துக்கலாம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன், விஜய்சேதுபதி, பாசில் ஆகியோர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட். இந்த படத்தில் கமல் ரொம்ப சீரியஸாக சொன்ன வசனம் இப்போது காமெடி மீம்ஸ்களாகவும் வலம் வருகிறது.

Also Read: தரமான கதையால் ஹிட்டடித்த 5 படங்கள்.. லவ் டுடே முன்னாடியே தெறிக்கவிட்ட மூவிஸ்

டான் – ஆம்ஃபா.. ஆஹாம்ஃபா: இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் டான். இந்த படம் முழுக்க அத்தனை காட்சியுமே நகைச்சுவை அதிகமாக உள்ள காட்சிகள் தான். இதில் நடிகர்கள் சூரியும், சிவகார்த்திகேயனும் கொரியன் ஸ்டைலில் பேசும் தமிழ் வசனங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பிரின்ஸ் – இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு.. ஆனால், இதுதான் ஃபர்ஸ்ட் டைம்’: தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் நடித்த திரைப்படம் பிரின்ஸ். வழக்கம் போல சிவாவின் காமெடி கலாட்டாவில் உருவான இந்த படத்தின் இந்த வசனம் இப்போது சோசியல் மீடியாவில் அதிக ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

Also Read: 6 பெரும் முதலைகளை ஓரங்கட்டிய பிரதீப் ரங்கநாதன்.. முதல் பந்திலேயே அடித்த இமாலய சிக்சர்

Trending News