செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

காணாமல் போன 5 வில்லன் நடிகர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சொர்ணாக்கா

சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள் முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பரிட்சையமாகி விடுவார்கள். முதல் படங்களிலேயே அதிக பேரும், புகழும் கூட கிடைத்து விடும். ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள். நன்றாக நடித்து பெயர் வாங்கும் நடிகர்களுக்கு சில நேரங்களில் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காது. வாய்ப்பு கிடைப்பவர்கள் அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டு விடுவார்கள்.

1. தேவ் கில்: தேவ் கில் இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். ராம் சரண் நடித்த மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். 2010 ஆம் ஆண்டு எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சுறா படத்தில் வில்லனாக நடித்தார். சுறா படத்திற்கு பிறகு தேவ் கில் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

Also Read: ஹீரோவாக சாதிக்க முடியாமல் வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. தவிர்க்க முடியாத வில்லனாக மாறிய வினய்

2.டேனியல் பாலாஜி: 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர். இவர் மறைந்த நடிகர் முரளியின் சகோதரன் ஆவார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

3.சாயாஜி சிண்டே: சாயாஜி சிண்டே தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர். சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, தாண்டவம், வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர். தூள் படத்தில் இவர் நடித்த காளிங்கராயன் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

Also Read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த விக்ரமின் தங்கலான்.. ஓடிடி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்

4.சாய் குமார்: சாய் குமார் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் பாக்யராஜ் நடித்த வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி விஜயின் ஆதி திரைப்படத்தில் RDX என்னும் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருப்பார். இவரை இப்போது எந்த தமிழ் திரைப்படங்களிலும் பார்க்க முடிவதில்லை.

5.சகுந்தலா: 2003 ஆம் ஆண்டு ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படம் தூள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சகுந்தலா. இவரை சொர்ணாக்கா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். படம் வெளிவந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இந்த கேரக்டர் யாராலும் மறக்கப்படவில்லை. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

Also Read: காந்தாராவை தூக்கி சாப்பிட வரும் மறைக்கப்பட்ட வரலாறு.. விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா ரஞ்சித்

- Advertisement -spot_img

Trending News