திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆர்மி மேனாக நடித்து மிரட்டி விட்ட டாப் 9 ஹீரோக்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அமரன்

Top 9 Heroes Played Army Man: தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 9 ஹீரோக்கள் ஆர்மி மேன் கேரக்டரில் நடித்து மிரட்டி விட்டனர். அந்த டாப் 9 ஹீரோக்கள் எந்த படங்களில் ஆர்மி மேன்களாக நடித்துள்ளனர் என்பதை பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- இயக்குனர் எஸ்பி முத்துராமன் கூட்டணியில் உருவான படம் ராணுவ வீரன். இதில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரரான ரஜினி, தேடப்படும் குற்றவாளியான நக்சல் கும்பலின் தலைவரான சிரஞ்சீவியை அழிப்பதை இந்த படத்தின் ஒன்லைன். இதில் அதிரடி ட்விஸ்ட் என்னவென்றால் சிரஞ்சீவி ரஜினியின் நண்பராகவும், அவரது தங்கையான நடிகை லலிதாவின் கணவரும் என்பதுதான்.

இதைத்தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் ‘விஸ்வரூபம்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து தீவிரவாத கும்பலை வேரறுத்தார். மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் ‘விவேகம்’ படத்தில் கமோண்டோவாக நடித்து ஆக்ஷனில் பிச்சு உதறினார். இதில் இந்தியாவிற்கு எதிராக ப்ளூட்டோனியம் ஆயுதத்தை பயன்படுத்தி நடக்க இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தார்.

தளபதி விஜய் ‘துப்பாக்கி’ படத்தில் ஸ்டைலிஷ் ஆன ஆர்மி மென் ஆக ஜெகதீஷ் என்ற கேரக்டரில் நடித்தார். தீவிரவாதிகள் பல நகரங்களுக்கு வெடிகுண்டு வைக்க திட்டமிடுகின்றனர். இது எப்படியோ விடுமுறைக்கு வந்த ஜெகதீஷ்க்கு தெரிய வர, சாதுரியமாக தீவிரவாத கும்பலின் தலைவரை அடையாளம் கண்டு, அவர்களது சதி திட்டத்தை முறியடித்தார்.

Also Read: கருப்பு உடையில் செம க்ளாஸாக இருக்கும் சஞ்சய்.. அச்சு அசல் விஜய் போல் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

ராணுவ வீரர்களாக நடித்த 9 ஹீரோக்கள்

சூர்யா, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ஆர்மி மேன் ஆக சிக்ஸ் பேக்கில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்த சூர்யா, மனமாற்றத்திற்காகவே ஆர்மியில் சேர்ந்து பெரிய ஆபிஸராக மாறுவார். அதைப்போல் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து ஒரு ஆயுதப் போராளியாக மாறுகிறார். அதன்பின் அவர் எப்படிப்பட்ட போராளியாக விளங்கினார், தனது மக்களை அவரால் மீட்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்தின் கதை

அடுத்ததாக கார்த்தி விமானப்படையின் பைலட்டாக வருண் என்ற கேரக்டரில் நடித்த படம் தான் காற்று வெளியிடை. இதில் வருண்- லீலா இருவருக்கும் காதல் ஏற்படும். ஆனால் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாமல் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் வருண் ராணுவத்திற்கு கிளம்ப விடுவார், அங்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் கைதியாக மாட்டிக் கொண்டு, அதன் பின்பு அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார், அவர் காதல் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

மேலும் விஷால், ஒரு ஆர்மி மேனாக இருந்து தன்னுடைய அண்ணனின் இறப்பிற்கு காரணமான தீவிரவாதியை தேடி கண்டுபிடிக்கும் படம் தான் ஆக்சன். இவ்வாறு இந்த டாப் 8 நடிகர்களைப் போலவே இப்போது சிவகார்த்திகேயனும் தன்னை ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக காட்டப் போகும் படம் தான் அமரன். இந்த படத்தில் ஒரு ராணுவ வீரராக முகுந்தன் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜனின் நிஜக் கதைதான் இது. இந்த படம் காஷ்மீரில் உள்ள ஒரு இந்திய ராணுவத்தின் சந்திக்கும் ஆபத்துகளில் கோர்வையாக அமைத்திருக்கின்றனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Also Read: இரும்பு கை மாயாவி படத்தின் அப்டேட்டை கொடுத்த லோகேஷ்.. ரஜினிக்கு அடுத்து சம்பவம் செய்ய போகும் சூர்யா

Trending News