புதன்கிழமை, ஜனவரி 22, 2025

300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் ஹீரோக்கள்.. அடுத்த வேட்டைக்கு தயாராகும் விஜய், கமல்

டாப் நடிகர்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவர்களது ரசிகர்களின் மூலம் படம் நல்ல வசூலை பெற்றுவிடும். மேலும் பெரிய நடிகர்களின் படங்களின் மீது எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும். அந்த வகையில் 300 கோடியை தாண்டி வசூல் செய்த டாப் நடிகர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் எந்திரன், கபாலி, 2.0 போன்ற படங்கள் 300 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் இடத்தை ரஜினி பிடித்துள்ளார்.

Also Read :நண்பருக்காக கால்ஷூட்டை தூக்கிக் கொடுத்த ரஜினி.. சத்தம் இல்லாமல் வேலையை தொடங்கிய தயாரிப்பாளர்

விஜய் : தளபதி விஜய்க்கு குடும்ப ஆடியன்ஸ் உள்ளதால் அவரது படங்களை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவதால் வசூல் வேட்டையாடும். அந்த வகையில் விஜயின் பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் 300 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கமல்ஹாசன் : உலக நாயகன் கமல்ஹாசனின் படங்கள் கடந்த ஆண்டு வரை ஒரு படம் கூட பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறாமல் இருந்தது. ஆனால் கடைசியாக வெளியான விக்ரம் படம் வசூல் வேட்டையாடி 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

Also Read :4 வெற்றி படங்களையும் கொண்டாடும் கமல்.. மேடையில் சிலாகித்த உலகநாயகன்!

பொன்னியின் செல்வன் : ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு என ஒரு மல்டி ஸ்டார் படமாக வெளியானது பொன்னியின் செல்வன். இப்படம் ஒரு வாரத்தை கடந்த நிலையில் 350 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் அடுத்ததாக விஜய் மற்றும் கமலின் படங்கள் 300 கோடி வசூலில் இணைய தயாராகி வருகிறது. அதாவது விஜயின் வாரிசு மற்றும் தளபதி 67 படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் கமலஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த படங்களும் 300 கோடி வசூலை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read :பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன்.. திரையுலக கிங் என நிரூபித்த மணிரத்னம்

Trending News