வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

குந்தவைக்கு குவியும் பட வாய்ப்பு.. ஒரு வயது இளையவருடன் ஜோடி போடும் திரிஷா

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை திரிஷா. டாப் நடிகர்களுடன் திரிஷா ஜோடி போட்டால் அந்த படம் ஹிட் என ரசிகர்கள் முன்கூட்டியே கணித்தனர். இவ்வாறு தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த திரிஷாவின் மார்க்கெட்டும் ஒரு நாள் சரிந்தது.

தொடர் தோல்வி மற்றும் வேறு நடிகைகளின் புதுவரவு திரிஷாவை வேறு மொழி படங்களை தேடி செல்ல வைத்தது. இத்துடன் திரிஷாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் காலி என்று சிலர் கைகொட்டி சிரித்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலம் குந்தவையாக கம்பேக் கொடுத்தார்.

Also Read : விட்ட மார்க்கெட்டை பிடித்த திரிஷா.. 40 வயதிலும் கைவசம் இருக்கும் 6 படங்கள்

இந்த வெற்றியை விடக்கூடாது என கெட்டியாக பிடித்துக் கொண்ட த்ரிஷா இப்போது தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இதில் உச்ச நட்சத்திரங்களான விஜய்யின் லியோ மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்களும் அடங்கும். அந்த வகையில் டாப் நடிகர்களின் வரிசையில் இருக்கும் மற்றொரு நடிகரின் படத்திலும் திரிஷா நடிக்கிறார்.

அதாவது சமீபத்தில் தனுஷின் ஐம்பதாவது பட அறிவிப்பு இணையத்தையே அல்லோலப்படுத்தியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் அவரது ஐம்பதாவது படம் உருவாக இருக்கிறது. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெத்தில் தொடங்கப்பட இருக்கிறது.

Also Read : நயன், திரிஷாவை ஓரம் கட்டிய ஐந்து “ஏ” கிரேடு நடிகைகள்.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நாங்க சளச்சவங்க இல்லை

இப்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிய இருக்கிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் 50 படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளது. இதில் த்ரிஷா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே தனுஷ் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து கொடி படத்தில் நடித்திருந்தனர். அப்போது இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் த்ரிஷாவுக்கு இப்போது 40 வயது ஆகும் நிலையில் அவரை விட ஒரு வயது இளையவரான தனுஷ் உடன் மீண்டும் ஜோடி சேர்கிறார்.

Also Read : கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

Trending News