செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

த்ரிஷா வாழ்க்கையில் கதகளி ஆடிய 5 பிரபலங்கள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் அம்மணி!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் த்ரிஷா என்றால் ஒரு ஜிவ்வென்று உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் வந்து விடும். அந்த அளவிற்கு அழகில் வசீகரித்து வைத்து இருப்பவர் நடிகை த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இருப்பினும், 38 வயதாகியும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் த்ரிஷாவின் கடந்த கால காதல் உறவுகள் தான் என்று கூறப்படுகிறது. அப்படி த்ரிஷாவின் வாழ்க்கையில் வந்து விளையாடிய காதல் ரோமியோக்களைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

விஜய்: விஜய் – த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தனர். அப்படி நடித்து கொண்டு இருக்கும் போது, குருவி படத்தின் போது விஜய் மற்றும் த்ரிஷா இடையே ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டதாக அந்த சமயத்தில் கூறப்பட்டது. மேலும் இருவரும் ஒரே கேராவனை பயன்படுத்திக் கொள்வது, படப்பிடிப்பில் அத்துமீறி கொஞ்சி கொள்வது, என இருப்பதாக பத்திரிகைகளில் கிசுகிசு வெளியானது.

இதனால் விஜய் மற்றும் திரிஷா என இருவர் வீட்டிலும் இந்த செய்தியால், வெடிகுண்டு வெடித்தது. அதன் பின் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக விலகி தன்னுடைய வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்து விட்டார். த்ரிஷா பாவம் தனிமரமானார்.

ராணா: த்ரிஷாவின் நெருங்கிய நண்பர்தான் நடிகர் ராணா டகுபதி. எங்கு சென்றாலும் ராணாவும் த்ரிஷாவும் ஒன்றாகத்தான் சென்று வந்தனர். அப்படி இருக்கையில் திடீரென ஒரு நாள்,ராணா அவருடைய காதலியை சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ராணாவின் காதலுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், த்ரிஷா மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

அந்த சமயம் த்ரிஷாவும், ராணாவும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. சில நாட்கள் கழித்து, திடீரென வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்தார் த்ரிஷா. இருப்பினும் அந்தத் திருமணம் நடைபெறவில்லை.

சிம்பு: கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்பு, த்ரிஷா ஜோடி பொருத்தமான காதல் ஜோடியாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். அதன் பின்பு கார்த்திக் டயல் செய்த எண் என விண்ணைத் தாண்டி வருவாயா படக் கதாபாத்திரங்களான கார்த்திக், ஜெஸ்ஸி ஆகிய இரு கதாபாத்திரங்களிலும் சிம்பு, த்ரிஷாவை அவரவர் வீட்டிலிருந்தே நடிக்க வைத்து சும்மா இருந்த சங்கை ஊதி விட்டார் கவுதம். அதன் பின்பு சிம்பு, த்ரிஷா இருவருக்கும் இடையே காதல் என புதிதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. த்ரிஷாவுக்கு தொழிலதிபர் வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், கல்யாணம் ரத்தாகிவிட்டது. அதற்கு காரணமே சிம்பு த்ரிஷா காதல்தான் என கூறப்பட்டது.

தனுஷ்: மனைவியை விவாகரத்து செய்து விட்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ள தனுஷின் வலையிலும் த்ரிஷா விழுந்து இருக்கிறார். நடித்த படங்கள் குறைவு என்றாலும், இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பது வரை சென்று விட்டது. பிறகு சமூக வலைதளத்தில் வறுத்தெடுக்கப்பட்டு சேட்டைகள் குறைந்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

Trending News