Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இரண்டாவது இன்னிங்ஸை அசால்டாக டீல் பண்ணும் த்ரிஷா. காலியாக போகும் கேரியர்!

இரண்டாவது இன்னிங்ஸை அசால்டாக டீல் பண்ணும் த்ரிஷா. காலியாக போகும் கேரியர்!

Trisha: அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் என்பார்கள். அப்படி பத்து வருஷத்துக்கு பிறகு தேடி வந்த அதிர்ஷ்டத்தை அசால்ட்டாக டீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. 20 வருடங்களாக திரிஷா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என அவருடைய சாதனை […]

Trisha: அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் என்பார்கள். அப்படி பத்து வருஷத்துக்கு பிறகு தேடி வந்த அதிர்ஷ்டத்தை அசால்ட்டாக டீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா.

20 வருடங்களாக திரிஷா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என அவருடைய சாதனை பட்டியலில் பேசப்படுகிறது. இதில் எட்டு முதல் பத்து வருஷம் அவர் மார்க்கெட் இல்லாமல் தான் இருந்தார்.

காலியாக போகும் கேரியர்!

பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்த குந்தவை கேரக்டர் மூலம் தான் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் தலை தூக்க ஆரம்பித்தது.

குந்தவை, ஜானு, ஜெஸ்ஸி போன்ற கேரக்டர்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் திரிஷா.
இரண்டாவது இன்னிங்சை படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது அவருக்கு.

டாப் ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்தால் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரலாம் என்று நினைத்து கிடைக்கும் படத்தில் எல்லாம் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு அவர் நடித்த டாப் ஹீரோக்களின் படங்களில் எல்லாமே அவருடைய கேரக்டர் நின்று பேசவில்லை.

அதிலும் விடாமுயற்சி படத்தின் கயல் கேரக்டர் மற்றும் சமீபத்தில் ரிலீசான தக்லைப் படத்தின் கேரக்டர் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நம்பர் ஒன் என்பதை தாண்டி நடிக்கும் கேரக்டர்கள் தான் மார்க்கெட்டை முடிவு செய்யும் என்று த்ரிஷா உணராவிட்டால் விரைவில் சொந்த செலவில் அவருக்கே சூனியம் வைத்துக் கொள்வார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.