புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்தடுத்து வெளிவர இருக்கும் த்ரிஷாவின் 7 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் இணைந்த குந்தவை

Trisha Upcoming Movies: 40 தாண்டிய நிலையிலும் திரிஷா தற்போது வரை பருவ மங்கையாக முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இடையில் கொஞ்சம் துவண்டு போயிருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டர் மூலம் நச்சென்று மறுபடியும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து லியோ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்து இளசுகளின் மனதையும் கவர்ந்து விட்டார்.

தற்போது இவர் தான் எல்லா படத்துக்கும் ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு பல வாய்ப்புகளை கைப்பற்றி விட்டார். அத்துடன் முன்பு இருந்த அழகை விட தற்போது பேரழகியாக ஜொலித்து வருகிறார். அதனாலயே என்னமோ தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் நாலா பக்கமும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் படங்களின் லிஸ்ட்களை பற்றி பார்க்கலாம்.

விஜய்யை தொடர்ந்து தற்போது அஜித்துக்கு ஜோடியாகும் வகையில் விடாமுயற்சி படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வருட இறுதியில் படம் திரையரங்குகளுக்கு வந்து விடும். இதனைத் தொடர்ந்து கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: திரிஷா நயன்தாராவை ஓவர் டேக் பண்ணும் நடிகை.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வரும் குழாயடி சண்டை

சதுரங்க வேட்டை படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை ஒட்டி இரண்டாவது பாகம் உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தை எச் வினோத் இயக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக நிர்மல் குமார் இயக்கிய அரவிந்த்சாமி மற்றும் திரிஷா நடிப்பில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் பண நெருக்கடியால் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இப்படமும் வெளிவர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் த்வித்வா (Dvitva) படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அடுத்ததாக கர்ஜனை, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். இப்படமும் இந்த வருட முடிவில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக மலையாளத்தில் ஐடெண்டிட்டி படத்தில் டோவினோ தமாஸ் ஜோடியாக நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு மிகவும் மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் மோகன்லாலுடன் ராம் என்கிற படத்தில் இணைந்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், காலில் சக்கரம் கட்டாத குறையாக பறந்து கொண்டு வருகிறார்.

Also read: விடாமுயற்சியை ஓரம் கட்டிட்டு சென்னை திரும்பிய திரிஷா.. நிற்க நேரமில்லாமல் பறப்பதற்கு காரணம் இதுதான்

Trending News