வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இனி ரஜினியை நம்பினால் கேரியரே போய்விடும்.. ஆட்டம் கண்ட தலைவர் 170

ரஜினி அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சரியாகப் போகவில்லை.

இதனால் ரஜினியின் படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற பெரிய கேள்வி எழுந்தது. இதனால் இப்படம் உருவாகுமா என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்தின் ப்ரொஃபைலை வைத்து இப்படத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார். ஆனால் இப்படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ரஜினியின் 170 ஆவது படம் என்னவாகும் என்ற பெருத்த கேள்வி எழுந்துள்ளது. அதாவது நெல்சன் படத்தை தொடர்ந்து ரஜினி அருண்ராஜா காமராஜ் படத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. ரஜினியின் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை அருண்ராஜா பாடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தலைவர் 169 படமே கேள்விக்குறியாக உள்ள நிலையில் இப்படத்தை எப்போது தொடங்குவது என்ற குழப்பத்தில் இயக்குனர் உள்ளார். இப்படியே போனால் ரஜினியின் படத்தை இயக்குவதற்கு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிவிடும் என யோசித்து உள்ளார் அருண்ராஜா.

இதனால் தற்போது கார்த்தியை வைத்து அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விருமன் படத்தை முடித்த கையோடு கார்த்தி அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கயுள்ளார். தற்போது இப்படத்திற்கான வேலைகளை மும்மரமாக பார்த்து வருகிறார் அருண் ராஜா. மேலும் மிக விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Trending News