வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல் போலவே டான்சில் பட்டையை கிளப்பிய 2 நடிகர்கள்.. வாய்ப்புகள் இல்லாததால் ஸ்கூல் ஆரம்பித்த நிலைமை

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். 70களின் ஆரம்பத்தில் இவர் உதவி நடன இயக்குனராக இருந்தார். இதன் மூலம் தான் கமலுக்கு இயக்குனர் பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது.

அந்த காலத்தில் நடனம் நன்றாக ஆட தெரிந்த நடிகர் என்றால் அது கமல் மட்டுமே. இவரது படங்களின் பாடல்களுக்கு மட்டும் தான் டான்ஸ் ஸ்டெப்புகள் அதிகமாக இருக்கும். நடனத்தை மையமாக வைத்து வந்த சலங்கை ஒலி என்னும் படத்தில் தன்னுடைய நடனத்திறமையை மொத்தமாக காட்டியிருப்பார். கமலுக்கு எல்லா விதமான நடனங்களும் தெரியும்.

Also Read : இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்

காதலா காதலா திரைப்படத்தில் நடன புயல் பிரபு தேவாவுக்கு சமமாக ஆடியிருப்பார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் கமலஹாசனுக்குள் இருக்கும் நடனத்திறமையை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியது என்றே சொல்லாம்.

கமலை போலவே நடிகர் விஜய், சிம்பு, சூர்யா போன்ற டாப் நடிகர்கள் நடனத்தில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள். எனினும் 90களின் இறுதியில் கமலை போலவே நடனம் ஆடக்கூடிய ஹீரோக்கள் இருவர் இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் கமலை போல் ஜொலிக்கவில்லை. கமல் போலவே டான்சில் பட்டையை கிளப்பிய 2 நடிகர்கள்,

Also Read : இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை.. ஒரு வேளை கமலுக்கு டூப்பா இருப்பாரோ!

பிரசாந்த்: பிரசாந்தை ஹீரோவாக்க வேண்டும் என்ற கனவோடு அவருடைய தந்தை தியாகராஜன் சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் அவரை பயிற்சி பெற வைத்தார். பிரசாந்த் தன்னுடைய முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி கவனத்தை ஈர்த்து இருப்பார். பிரசாந்தும், சிம்ரனும் ஆடும் பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும்.

வினீத்: நடிகர் வினீத் தமிழ், மலையாளம், கன்னடம் , தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சந்திரமுகி திரைப்படத்தில் இவர் ‘ரா ரா’ பாடலுக்கு ஆடிய நடனம் மிகவும் பிரபலமானது. பழம்பெரும் நடிகை, நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் சொந்தமாக நாட்டியபள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

Also Read : ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த முதல் தமிழ் படம்.. கமல் நடித்து150 நாட்கள் ஓடி சாதனை

Trending News