Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித்தின் வலிமை எப்படி இருக்கு.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித்தின் வலிமை எப்படி இருக்கு.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

சுமார் இரண்டரை வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த தல அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி தல ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது.  இதில் அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் கார்த்திகேயாவின் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், யுவனின் பிஜிஎம் திரையரங்கில் […]

சுமார் இரண்டரை வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த தல அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி தல ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது.  இதில் அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் கார்த்திகேயாவின் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், யுவனின் பிஜிஎம் திரையரங்கில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

valimai-twit-review-cinemapettai
valimai-twit-review-cinemapettai

அத்துடன் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமாக்ஸ் ஸ்டைல் காட்சிகள் இந்திய சினிமாவிலேயே இதுவரை எடுக்காத அளவிற்கு மிரளவிட்டுள்ளதாக ட்விட்டர் பிரபலங்கள் வலிமை படத்தை குறித்து விமர்சிக்கின்றனர். மேலும் வலிமை படத்தில் எந்த ஒரு காட்சியையும் கிப்ட் செய்ய முடியாத அளவுக்கு படம் பார்ப்பவர்களை என்கேஜ் ஆக வைத்திருக்கிறது.

valimai-twit-review1--cinemapettai
valimai-twit-review1–cinemapettai

மேலும் இன்டர்வல் பைக் ஸ்டன்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் ட்விட்டரில் விமர்சிக்கின்றனர். மேலும் வலிமை படம் இயக்குனர் எச்.வினோத்தின் அருமையான படைப்பு என்றும் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

valimai-twitter-review
valimai-twitter-review

வலிமை திரைப்படம் இந்தியாவின் சிறந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கிறது. ஆக்சன் மூவி வெறியர்களுக்கு ஆகவே உருவாக்கப்பட்ட வலிமை படத்தின் கதை மிகச் சாதாரணமாக இருந்ததாகவும், அம்மா-தம்பி சென்டிமென்ட் எனக் கதை நகர்வதால் வலிமை திரைப்படம் சிலரை கடுப்பேற்றியதாக ரசிகர்கள் ட்விட்டரில் நெகட்டிவ் கமெண்ட் பதிவிடுகின்றனர்.

valimai-twitter-review-2
valimai-twitter-review-2

ஆகையால் வலிமை படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி இழுவையாக சென்றாலும் ஆக்சன் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்காக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

valimai-twit-review2--cinemapettai
valimai-twit-review2–cinemapettai

இந்தப் புதிய கதையாக இருக்கும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு வலிமை படம் ஏமாற்றத்தைத் தந்தாலும் தல அஜித்தின் டான்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் வேற லெவல் இருக்கும் வலிமை திரைப்படம் திரையரங்கில் சென்று பார்க்க கூடிய தரமான படமாக இருக்கிறது. வலிமை படத்தின் ரேட்டிங்- 4/5.

valimai-twit-review5-cinemapettai
valimai-twit-review5-cinemapettai

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.