Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வணங்கான் படத்தால் டெக்னீசியன்கள் படும் அவதி.. மீண்டும் கடும் புகைச்சலில் சூர்யா, பாலா

வணங்கான் படத்தால் டெக்னீசியன்கள் படும் அவதி.. மீண்டும் கடும் புகைச்சலில் சூர்யா, பாலா

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் திரைப்படம் பல மாதங்களாக இழுத்துக் கொண்டே போகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. […]

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் திரைப்படம் பல மாதங்களாக இழுத்துக் கொண்டே போகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு பல சமரச பேச்சுகளுக்கிடையில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட்டது. இருந்தாலும் இதன் படப்பிடிப்பு முழுமையாக நடைபெறுவது போன்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த படத்தில் வேலை செய்யும் கேமரா மேன் பாலசுப்பிரமணியம் இந்த படத்திலிருந்து இப்பொழுது விலகுகிறாராம்.

இவர் தமிழ் சினிமாவில் பலரும் பாராட்டும் வகையில் நல்ல பெயர் எடுத்த கேமராமேன் ஆவார். இவர் பணிபுரியும் படங்களில் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்க மாட்டாராம். மேலும் இயக்குனருக்கு பிடித்த வகையிலும் இவருடைய வேலை கனகச்சிதமாக இருக்குமாம்.

அந்த வகையில் இவர் பிதாமகன், மஜா, சீமா ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். பிதாமகன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் இணைத்துள்ளார்.

ஆனால் இந்த படம் பல நாட்களாக இழுத்துக் கொண்டே போவதால் இவர் பல ப்ராஜெக்ட்களை மிஸ் பண்ணி விட்டாராம். இதனால் யோசித்த பாலசுப்பிரமணியம் நேரடியாக சூர்யாவிடமே சென்று இது குறித்து பேசி நான் விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

சூர்யாவும் மறுக்க முடியாமல் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இவரைப் போன்று இன்னும் சில டெக்னீசியங்களும் இந்த படத்தினால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்தால் தான் அவர்கள் அடுத்த படத்தின் வேலைகளை பார்க்க முடியும். ஆனால் இப்படி பல பிரச்சினைகளால் இப்படம் தாமதமாகி வருவதால் அவர்கள் வெளியில் சொல்ல முடியாத வேதனையில் புலம்பி வருகிறார்களாம்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.