புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிரம்மாண்டமாக நடக்க உள்ள வாரிசு ஆடியோ லான்ச்.. டிக்கெட் விலையை கேட்டா சும்மா தல சுத்துது

விஜய்யின் படம் வெளியாவதை காட்டிலும் எப்போதுமே அவரது படத்தின் ஆடியோ லான்ச் ஃபங்ஷனுக்காக தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பார்கள். ஏனென்றால் எப்போதுமே விஜய் படம் வெளியாவதில் ஏதாவது பிரச்சனை அல்லது சர்ச்சை வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கான சரியான பதிலடியை விஜய் ஆடியோ லாஞ்ச் பங்க்ஷனில் கொடுப்பார்.

ஆனால் விஜய் நடிப்பில் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ய முடியவில்லை. காரணம் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இதனால் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெறவில்லை.

Also Read : அஜித், விஜய்யுடன் பொங்கலுக்கு மோத தயாராகும் கமல்.. ரஜினிக்கு போட்டியாக விறுவிறுப்பாக தொடங்கிய படத்தின் வேலை.!

இதற்கு பதிலாக சன் டிவியில் 10 வருடங்களுக்குப் பிறகு விஜய் பேட்டி கொடுத்திருந்தார். இந்த சூழலில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் வருகின்ற 24-ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் தற்போது படு ஜோராக நடந்து வருகிறது.

மேலும் வாரிசு படத்தில் இசையமைப்பாளர் தமன் இந்த ஏற்பாடுகளை பார்வையிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இப்போது வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் டிக்கெட் விலையை கேட்டால் தலையை சுத்துகிறது. அதாவது ஒரு டிக்கெட்டின் விலை 4000 முதல் 5000 வரை வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Also Read : ஒன்றிய அரசை பதம் பார்க்கப் போகும் விஜய்.. தலைமை தாங்கும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்

ஏற்கனவே விஜய் ரசிகர் மன்ற ரசிகர்களுக்கு மட்டும் ஸ்கேனிங் முறையில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர மற்ற ரசிகர்களுக்கு 5000 வரை டிக்கெட் வசூலிக்கப்படுவதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் ஆடிய லான்ச் பங்க்ஷனுக்கு டிக்கெட் விலை இவ்வளவு என்றால் வாரிசு படத்தின் டிக்கெட் எவ்வளவாக இருக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். வாரிசு ஆடியோ லான்ச் டிக்கெட் விலை இவ்வளவு விற்கப்படுகிறது விஜய் காதுக்கு சென்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read : டாம் குரூஸுக்கே சவால் விடப் போகும் விஜய்.. பார்த்து உருட்டுங்க பாஸ் மிஸ் ஆச்சுன்னா தலைமுடி கூட மிஞ்சாது

Trending News