Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

GOAT டைட்டில்ல இவ்வளவு இருக்கா.? லீக்கானாலும் மாற்ற முடியாது, வெங்கட் பிரபு அடம் பிடிக்க காரணம்

GOAT டைட்டில்ல இவ்வளவு இருக்கா.? லீக்கானாலும் மாற்ற முடியாது, வெங்கட் பிரபு அடம் பிடிக்க காரணம்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு டைட்டிலை தேர்வு செய்த வெங்கட் பிரபு.

Venkat Prabhu chose the title for GOAT: லியோவிற்கு பின்பு  வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பாஸ் அல்லது பஸல் என வதந்திகள் கிளம்பிய நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் இப்போது தளபதி 68 படத்தின் டைட்டில் GOAT  என்பது கசிந்துள்ளது. படத்தின் டைட்டில் லீக் ஆனாலும் பரவாயில்லை, GOAT  என்ற டைட்டிலை மாற்ற முடியாது என வெங்கட் பிரபு அடம் பிடிக்கிறார். இதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது.

GOAT என்ற வார்த்தை கோலிவுட்டில் தான் ஃபேமஸ் இல்லை ஆனால் பாலிவுட், ஹாலிவுட்டில் அதற்கு இருக்கிற மரியாதையே வேறு. எல்லா நேரத்திலும் சிறந்த பெயராக இருக்கக்கூடிய இந்த டைட்டிலை கேட்டதும் விஜய்க்கும் ரொம்ப பிடித்து விட்டதாம்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு டைட்டிலை தேர்வு செய்த வெங்கட் பிரபு

இதனால் GOAT என்பதுதான் தளபதி 68 படத்தின் டைட்டில், இதில் மாற்றம் ஏற்படுவதற்கு எந்த சான்சும் இல்லை. மேலும் வரும் புத்தாண்டு தினத்தன்று அல்லது டிசம்பர் 31ஆம் தேதி அன்று படத்தின் டைட்டிலை  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகின்றனர். அதுமட்டுமல்ல நியூ இயர் ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு பட குழுவினர் சென்றுள்ளனர். அங்கு விஜய்- மீனாட்சி சவுத்ரி இருவரின் டூயட் பாடலை படமாக்க உள்ளனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.