முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் ரகுமான் மூவரின் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படங்கள் வெளியாகி பயங்கர ஹிட்டானது.

அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த படமும் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. முத்துவீரன் என்ற இளைஞனாக நடித்திருக்கும் சிம்பு இந்த படத்தில் மொத்தமாக உருமாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

வழக்கமாக சிம்புவின் திரைப்படங்களில் ஒரு ஸ்டைல், மேனரிசம் இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் சிம்புவின் அடையாளம் எங்கேயும் இல்லாதவாறு அவர் முத்துவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு கைத்தட்டலை பெறுகிறது.

அதேபோன்று ஏ ஆர் ரகுமான் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. காட்சிகளின் நகர்வுக்கு ஏற்றவாறு அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசையும், படத்தின் முடிவில் கொடுத்த இசையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதிலும் இறுதி காட்சியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கும் இடத்தில் வரும் பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது.

Also read: வெந்து தணிந்தது காடு 5 மணி ஷோ பாக்க போறீங்களா.? பயமுறுத்தி அறிக்கை வெளியிட்ட கவுதம் மேனன்

மேலும் படத்தில் இடம்பெற்று இருக்கும் வசனங்களும், ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் மொத்த படத்தையும் சிம்புவின் அட்டகாசமான நடிப்பும், ஏ ஆர் ரகுமானின் மிரட்டலான இசையும் தாங்கி பிடித்திருக்கிறது. வழக்கமாக இது போன்ற கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஏனென்றால் இப்போதைய காலகட்டத்தில் அநீதியை தட்டி கேட்பது, பொங்கி எழுவது என்பது சாத்தியம் கிடையாது. அந்த வகையில் திரைப்படத்தில் ஹீரோ அநீதிக்கு எதிராக பொங்கி எழுவதை ரசிகர்கள் ஆர்வத்துடன் விரும்பி ரசிக்கின்றனர். அதனால்தான் பாட்ஷா, நாயகன் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். அந்த லிஸ்டில் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் இணைந்துள்ளது.

Also read: சிம்புவின் மாஸ் எல்லாம் கிடையாது.. இது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை