வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கௌதம் வாசுதேவ் மேனன் தலையில் டக்குன்னு எரிஞ்ச பல்பு .. வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Gautham Vasudev Menon: சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்து என்ன படத்தை இயக்குவார் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் டைரக்சனுக்கு பிரேக் கொடுத்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க சென்று விட்டார்.

லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனன், சில வருடங்களுக்கு முன்பு இயக்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். சீயான் விக்ரம் நடித்த இந்த படம் விரைவில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

Also Read:அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் 6 பெரிய படங்கள்.. உலகநாயகனுடன் மோதும் சூர்யா

இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற வேட்டையாடு விளையாடு படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் யாருமே எதிர்பாக்காத வகையில் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. ரீ ரீலீஸ் செய்யட்டும் 25 நாட்கள் ஓடிய இந்த படம், 80 லட்சம் ரூபாய் வியாபார லாபத்தை கொடுத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன ஒரு படத்திற்கு இன்னும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது கௌதம் வாசுதேவ் மேனனுக்கு மற்றொரு ஐடியாவை கொடுத்து இருக்கிறது. படத்திற்கான ரெஸ்பான்ஸ் இந்த அளவுக்கு இருப்பதால், வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் அவர்.

Also Read:பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

வேட்டையாடு விளையாடு படத்தின் மொத்த ரைட்சும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கைவசம் இருக்கிறது. ரீ ரிலீஸ் வியாபாரத்தை தொடர்ந்து தயாரிப்பாளரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் இருவருமே தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

வேட்டையாடு விளையாடு படத்தின் முதல் பாகம் கமலின் ஜோடியாக நடித்த ஜோதிகாவை உயிரோடு மீட்டெடுப்பது போல் முடிந்திருக்கும். இதன் இரண்டாம் பாகம் அதிலிருந்து தொடங்கப்படுமா அல்லது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் எடுக்கப்படுமா என இனிவரும் காலங்களில் தான் தெரியும்.

Also Read:குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

Trending News