செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பீஸ்ட் தேதியை வெளியிட்டு உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. கோபத்திலும் சிரிக்கும் நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாடலும் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இந்த படத்தை திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் இன்னும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதனால் விஜய்யின் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு போன் போட்டு படம் எப்போது வெளியாகிறது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பு நிர்வாகம் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே இயக்குனர் விக்னேஷ் சிவன் பீஸ்ட் திரைப்படத்தின் தேதியை போட்டோ போட்டு அறிவித்துள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது இது பற்றிய அறிவிப்பை விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்.

அந்த போட்டோவில் பீஸ்ட் படத்தின் வெளியீட்டுத் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். எப்போதும் ஒரு திரைப்படத்தின் அப்டேட் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் பிரபலங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனாலும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.

ஆனால் விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் போது கொஞ்சமும் யோசிக்காமல் பீஸ்ட் படத்தின் வெளியீட்டு தேதியையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த செயலால் தற்போது நெல்சன் கடுப்பில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News