பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் மிகுந்த பரபரப்புடன் முடிவு செய்யப்பட்டு சன் பிக்சர்ஸ், விஜய், நெல்சன், அனிருத் என பிரம்மாண்டமான கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் தொடங்கியது.
படம் தொடங்கப்பட்ட நாள் முதலில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத அளவில் உலக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. இது பட வெளியீட்டிற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாகவும் அமைந்தது.
இதனால் படம் வெளிவந்த பிறகு வேற லெவலில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. கடந்த ஏப்ரல் 13 அன்று வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை பெற்று விஜய்க்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தது.
படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று இன்றளவும் பல மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால் இயக்குநர் தரப்பில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் இந்த படத்தின் கதையை விஜய்க்கு சொல்லும்போது குடும்பம் கலந்த காமெடி கதையாகத்தான் கூறியிருக்கிறார்.
ஆனால் விஜய் அதில் சில மாற்றங்கள் செய்து ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக மாற்றுமாறு இயக்குனருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் கால்ஷீட் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இயக்குநரும் சரி என்று சொல்லி படத்தில் சில மாறுதல்களை செய்து இருக்கிறார். இதனால்தான் படம் தற்போது தோல்வியை நோக்கி சென்றுள்ளது.
இதேபோல விஜய் 66 படத்தின் தொடக்க விழா சமீபத்தில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெப்ஸி தொழிலாளர்களுக்காக அவர் சென்னையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தயாரிப்பு நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தவிர விஜய் மற்ற சில விஷயங்களிலும் அளவுக்கு அதிகமாக தலையிடுவதால் என்ன செய்வது என தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் இருக்கிறது.
இதேபோன்று அவரின் தலையீடு அதிகமாக இருந்ததன் காரணமாக தான் பீஸ்ட் படம் தோல்வியை தழுவி இருக்கிறது என்ற தகவலும் கசியவே தற்போது தயாரிப்பு நிறுவனம் பயந்து கொண்டு இருக்கிறது. இதனால் அவர்கள் விஜய்யிடம் நீங்கள் நடிப்பை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் ரசிகர்களுக்கு பிடித்தது போன்று படத்தை நாங்கள் நிச்சயம் தருவோம் என்று நேரடியாகவே கூறிவிட்டார்களாம்.
இப்படி அவர்கள் நேர்பட கூறியதை விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன்மூலம் விஜய்க்கு தமிழ் இயக்குனர்களை காட்டிலும் தெலுங்கு இயக்குனர்களிடம் மரியாதை இல்லை என்ற பேச்சு தற்போது திரையுலகில் அடிபட்டு வருகிறது.