சிவகார்த்திகேயன் எழுதிய பீஸ்ட் பட அரபிக் குத்து.. ஒரு வழியா அர்த்தத்தை கண்டு பிடித்த நெட்டிசன்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் பாடல் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ வெளியாகி இரண்டு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்ட் ஆனது.

நெல்சன் தன்னுடைய டாக்டர் படத்தில் பாடல்கள் உருவாகும் வீடியோவை வெளியிட்டது போல பீஸ்ட் படத்திலும் அதே பாணியை பின்பற்றி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத் தன்னுடைய படத்தில் அரபிக் பாடல் இசை அமைக்க காத்திருந்தார். ஆனால் பல இயக்குனர்களும் தங்கள் படத்தில் அரபிக் பாடலை வைக்க சம்மதிக்கவில்லை. நெல்சன் பீஸ்ட் படத்தில் குத்துப்பாடலை வைக்க திட்டமிட்டிருந்தார்.

இதனால் நெல்சன், அனிருத் இருவரும் சேர்ந்து அரபிக் குத்து பீஸ்ட் படத்தில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு வரிகள் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் ஹலமத்தி ஹப்பி போல்… ஹலமதி ஹப்பி வந்தா… ஹலமதி ஹப்பி வந்தாலே என்ற அரபி மொழியில் ஆரம்பிக்கப்படுகிறது.

இப்பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹலமத்தி ஹப்பி என்றால் ஆங்கிலத்தில் ” I dreamed of my love “. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த பாடலை வெளியிடுவதும், ஹலமத்தி ஹப்பி என்ற வார்த்தைகளாலும் இது காதல் கலந்த குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர் நகைசுவையாக உருவாக்கிய இந்த ஹலமத்தி ஹப்பி பாடலின் மேக்கிங் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ யூட்யூபில் தற்போது வரை ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →