விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் நடித்த அனுபவங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தற்போது உலக அளவில் சென்று அடைந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இப்பாடலுக்கு பல நடிகர்களும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் வெளியிடுகின்றனர். முதலில் மால் சண்டை போடும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் படக்காட்சிகள் வெளியானாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் சாமியிடம் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் லோகேஷ் கனகராஜ் நெல்சன் திலீப்குமார்ரிடம் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கேட்டிருந்தார். அதனால் இப்படத்தினை விஜய் ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர்.
தற்போது பீஸ்ட் படத்தில் ஒரு சில காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் தளபதி விஜய் வெள்ளை சட்டையுடன் ரத்தம் சிந்திய படியும் கையில் துப்பாக்கி வைத்தப்படியும் உள்ளார். மேலும் தளபதி விஜய் ஒரு குகையில் இருந்து வெளியே வந்து எதிரிகளிடம் சண்டையிடுகிறார். இதில் அனிருத் இசையமைத்த தீம் இசையுடன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் கேங்ஸ்டர் கைக்கொள்ளும் தலைவனைப் பற்றிய கதை என கூறி வருகின்றனர்.