Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அப்பவே விஜய்யுடன் கெஞ்சி கதறிய நெல்சன்.. பீஸ்ட் சொதப்பலுக்கு இதுதான் காரணமாம்

அப்பவே விஜய்யுடன் கெஞ்சி கதறிய நெல்சன்.. பீஸ்ட் சொதப்பலுக்கு இதுதான் காரணமாம்

இயக்குனர் நெல்சன் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராக மாறிவிட்டது. காரணம் இவர் இயக்கும் படங்கள் எதார்த்தமாக நல்ல பாடல்களுடன் முக்கியமாக நகைச்சுவை கலந்த படங்களாக வெளிவருகிறது. இவர் படங்கள் வெளிவந்து அனைவரின் வரவேற்பை பெற்று வெற்றிப் படங்களாக […]

இயக்குனர் நெல்சன் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராக மாறிவிட்டது. காரணம் இவர் இயக்கும் படங்கள் எதார்த்தமாக நல்ல பாடல்களுடன் முக்கியமாக நகைச்சுவை கலந்த படங்களாக வெளிவருகிறது. இவர் படங்கள் வெளிவந்து அனைவரின் வரவேற்பை பெற்று வெற்றிப் படங்களாக மாறுகிறது.

நெல்சன் முதல் படம் வேட்டை மன்னன் கதாநாயகன் சிம்புவை வைத்து ஆரம்பித்தார். சில பிரச்சினையின் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்னர் இவர் விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக நீயா நானா இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணிபுரிந்தார். முதல் படம் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. அதனால் பழைய தொழில் விஜய் டிவி கே சென்றுவிட்டார்.

பின்னர் அனிருத் நட்பின் மூலம் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அந்த படம் நயன்தாராவுக்கும் சரி , நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாக மாறிய திரைப்படம். மக்களிடையே நெல்சன் அறியப்பட்டார். பின்னர் சிவகார்த்திகேயன் மூலம் அடுத்த படம் டாக்டர் திரைப்படம் இயக்க வாய்ப்பு வந்தது.

டாக்டர் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல படமாக நகைச்சுவையுடன் கூடிய திரைப்படமாக மக்களிடம் சென்று சேர்ந்தது. இதன் பாடல்கள் பட்டி தொட்டி வரை அனைவராலும் பாடப்பட்டது. டாக்டர் திரைப்படம் நெல்சனுக்குசிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை வழங்கியது. இது முக்கியமாக இவர் படங்களின் புரமோஷனுக்கு சிவகார்த்திகேயன், அனிருத் மூன்று பேரும் செய்யும் சேட்டைகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

அடுத்து விஜய்க்கு இயக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைத்தது. இவரது வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. விஜய்யிடம் இவர் கதை சொல்லும் பொழுது குடும்பம் கலந்து நகைச்சுவையுடன் நல்ல கலகலப்பாக போகும் திரைப்பட கதையை விஜய்யிடம் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் விஜய் அவர்கள் காமெடி மட்டும் வேண்டாம். ஆக்சன் கலந்த காமெடி திரைப்படமாக எடுக்க வற்புறுத்தியுள்ளார். இவரும் யோசிக்காமல் விஜய் கேட்டு விட்டார் என்று படத்தை ஆரம்பித்துவிட்டார்.

பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் புலம்பிக் கொண்டிருக்கிறார். எதற்காக விஜய் சொன்னதை கேட்டோம் முடியாது என்று சொல்லிவிட்டு காமெடி கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து பண்ணி இருக்கலாமே என்று இப்போது அனைவரிடமும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து ரஜினிகாந்த் திரைப்படம் எப்படி வரும் என்ற பயத்தில் அனைத்து ரசிகர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.