Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிரபல காமெடி நடிகருக்கு கடவுளாய் மாறிய விஜய்.. இறந்த நடிகருக்காக தளபதி செய்த செயல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு நடனம், நடிப்பு […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு நடனம், நடிப்பு என அனைத்திலும் ஆர்வம் காட்டி தன்னுடைய விடா முயற்சியால் இந்த நிலைமைக்கு வந்து உள்ளார் விஜய்.

தளபதி விஜய் கேரியரிலேயே திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் விஜய்க்கு பாராட்டையும் வாங்கித் தந்தது. இப்படத்தில் டவுசர் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட்.

இவர் ஒரு படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்துள்ளார். இப்போது இந்த செய்தி விஜய்க்கு தெரிந்தவுடன் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உடன் பாரி வெங்கட் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இந்தச் செய்தியை நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காக்கா கோபால் குடும்பத்திற்கும் விஜய் மற்றும் அவரது தந்தை பல உதவிகள் செய்துள்ளார்களாம். அதே போல் தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் விஜய் செய்த உதவியை பற்றி கூறியிருந்தார்.

தாடி பாலாஜி தந்தை உடல்நிலை சரியில்லாத போது தளபதி விஜய் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். பல நடிகர்கள் உதவி செய்வதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் விஜய் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார். தற்போது அந்த நடிகர்களே விஜய் செய்த உதவியை சொல்வதால்தான் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. தல அஜித்தை போல் விலையும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் சில உதவிகளை செய்து தான் வருகிறாராம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.