Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதியை வச்சு எடுத்த கைராசி.. வேற மாதிரி தெறிக்கவிட போகும் 3 ஹிட் இயக்குனர்கள்

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. விஜயின் படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இதனால் விஜய் படத்தின் தயாரிப்பாளர்கள் மிகுந்த லாபம் பார்க்கிறார்கள். […]

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. விஜயின் படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இதனால் விஜய் படத்தின் தயாரிப்பாளர்கள் மிகுந்த லாபம் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய்யின் இயக்குனர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்து வருகிறது.

அட்லீ: ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. அதன் பிறகு மெர்சல், தெறி, பிகில் தொடர்ந்து மூன்று படங்களை தளபதி விஜய்யை வைத்து இயக்கினார். பிகில் படம் உருவாகும் பொழுது ஷாருக்கான் இடம் ஒரு கதைசொல்லி பாலிவுட் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அட்லி. லயன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ரெட் சில்லி நிறுவனம் தயாரிக்கிறது.

லோகேஷ் கனகராஜ்: விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. லோகேஷ் விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து உலக நாயகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் விக்ரம் படத்தை தயாரிக்கிறது

நெல்சன் திலீப்குமார்: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தில் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

விஜயின் இயக்குனர்களுக்கு தற்போது சூப்பர்ஸ்டார், உலக நாயகன், ஷாருக்கான் ஆகியோரின் படங்களை இயக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. தளபதியின் இயக்குனர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதால் இது எல்லாத்துக்கும் தளபதியோட ராசி தான் காரணம் என விஜய் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.