Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கஷ்ட காலத்தில் இருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்.. இன்றுவரை எதற்கும் அசராத வில்லாதி வில்லன்

கஷ்ட காலத்தில் இருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்.. இன்றுவரை எதற்கும் அசராத வில்லாதி வில்லன்

தளபதி விஜய்யை வைத்து பெரிய படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் இருந்து வருகிறார். இதனால் தற்போது படங்களில் சிறு சிறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பழைய படங்களில் வில்லனாக […]

தளபதி விஜய்யை வைத்து பெரிய படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் இருந்து வருகிறார். இதனால் தற்போது படங்களில் சிறு சிறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பழைய படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

தற்போது வயது முதிர்வு மற்றும் கஷ்ட காலம் என்பதால் சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பாசில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. விஜய்யை ஒரு காதல் ஹீரோவாக மாற்றிய படம் இது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. இந்த படத்தை தயாரித்தவர் சங்கிலி முருகன் தான். மீண்டும் இவருடைய தயாரிப்பில் விஜய் சுறா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெரும்பாலும் சங்கிலி முருகன் கார்த்திக்கின் படத்தை தயாரித்துள்ளார்.

விஜய்யின் ஒரு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும் சுறா படத்தால் மிகுந்த கடன் நெருக்கடியில் சங்கிலி முருகன் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்காமல் இருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை தயாரித்தார்.

அந்தப் படமும் திரையரங்குகளில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் சங்கிலிமுருகன் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் வயது முதிர்ந்த காலத்திலும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் தயாரிப்பில் வெளியான படம் மிகுந்த சரிவை சந்தித்தது. அதை பெரிதுபடுத்தாமலும், யாரிடமும் பணம் கேட்கமால் தனது வாழ்நாளை கௌரவமாக ஓட்டி வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.