Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரம் படம் பார்த்தபின் போன் போட்ட தளபதி.. விஜய் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரம்

விக்ரம் படம் பார்த்தபின் போன் போட்ட தளபதி.. விஜய் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் விக்ரம் படத்திற்கு கிடைத்த அளவுக்கு எந்த படங்களுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் படக்குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் விக்ரம் படத்திற்கு கிடைத்த அளவுக்கு எந்த படங்களுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் படக்குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பெரிய நடிகர்கள் ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமலஹாசன், லோகேஷ், அனிருத் ஆகியோரை போனில் அழைத்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் இந்தப் பெரிய நட்சத்திரங்களை தாண்டி அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் ஏஜென்ட் டீனா. இவர் நிஜப் பெயர் வசந்தி. இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளார்.

விஜய், அஜித் பழைய படங்களில் இடம் பெற்ற குருப் பாடல்களில் பின்னால் வசந்தி ஆடியுள்ளார். இந்நிலையில் வசந்தி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தினேஷ் மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் தினேஷ் மூலமாக தான் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வசந்திக்கு கிடைத்துள்ளது.

ஆனால் முதலில் உலகநாயகனுடன் நடிக்க பயந்த வசந்திக்கு லோகேஷ் தைரியம் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் வசந்தி. இந்நிலையில் பல தரப்பில் இருந்து இவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்த தளபதி விஜய், தினேஷ் மாஸ்டரை போனில் அழைத்த வசந்தியின் நடிப்பை பாராட்டியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் வசந்தி மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். இவ்வளவு பிஸியாக இருக்கும் நிலையிலும் மற்ற நடிகர்களின் படங்களையும் நேரம் செலவு விஜய் பார்க்கின்றார் என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.