Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லோகேஷ்யிடம் கெஞ்சிய விஜய் சேதுபதி.. இந்த மனுஷ மூளை என்னம்மா வேலை செய்யுது

லோகேஷ்யிடம் கெஞ்சிய விஜய் சேதுபதி.. இந்த மனுஷ மூளை என்னம்மா வேலை செய்யுது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த சந்தானம் கதாபாத்திரத்திற்காக பலர் இடத்திலிருந்து பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த சந்தானம் கதாபாத்திரத்திற்காக பலர் இடத்திலிருந்து பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் சேதுபதி விக்ரம் படத்திற்கு முன்னதாக மாஸ்டர் படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்திலும் வில்லத்தனமான பவானி கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் மிரள செய்திருந்தார். இந்நிலையில் கமலஹாசனை வைத்து லோகேஷ் படம் இயக்குவதை கேள்விபட்ட விஜய் சேதுபதி அவருக்கு போன் போட்டுள்ளார்.

விக்ரம் படத்தில் தனக்கு ஏதாவது கதாபாத்திரம் போட்டு கொடு என கேட்டுள்ளார். முதலில் லோகேஷ் மறுத்துவிட்டாராம். அதன்பிறகு என்கிட்ட தான் வரணும் என விஜய் சேதுபதி காத்திருந்த நிலையில் லோகேஷ் மீண்டும் விஜய் சேதுபதி நாடி விக்ரம் படத்தை வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதாவது கமலஹாசனுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை விஜய் சேதுபதிக்கு இருந்துள்ளது. அதற்கு காரணம் கமலஹாசன் என்ற மூளை எப்படி வேலை செய்கிறது. அவர் நடிப்பை எவ்வாறு உள்வாங்கி நடிக்கிறார் என்பதை நான் பார்த்துவிட வேண்டுமென்பது என்னுடைய ஆசை என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

அதன்பிறகு விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்த பிறகு விஜய் சேதுபதி லோகேஷ்யிடம், கமலஹாசன் அவர்களிடம் நேருக்கு நேராக பேசிக் கொள்ளும்படியான காட்சியில் வைக்கும்படியும் அதனை வைத்து தான் நடிப்பினை சிலவற்றை கற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

அதைப்போல் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் தனது பல நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மேலும் தற்போது கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனது அசுர நடிப்பை ரசிகர்களுக்கு காட்டவேண்டும் என களத்தில் இறங்கியுள்ளார். மேலும் கத்ரினா கைப் உடன் மெரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.