Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

‘மௌனி’யாக இருக்கும் விஜய்: தமிழக அரசியலில் இது எடுபடுமா ஜனநாயகன் சர்ச்சை பின்னணி!

‘மௌனி’யாக இருக்கும் விஜய்: தமிழக அரசியலில் இது எடுபடுமா ஜனநாயகன் சர்ச்சை பின்னணி!

ஜனநாயகன் முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சார படம். விஜய்யின் பிம்பத்தை உயர்த்தி ரசிகர்களை உசுப்பி விட்டு தன்னை தலைவனாக ஏற்றுக் கொள்ள தூண்டும் படம். வெளிவந்தால் விஜய்க்கு தான் லாபம். படம் வந்து பொதுமக்களை ஈர்க்கவில்லை என்பது வேறு […]

ஜனநாயகன் முழுக்க முழுக்க தேர்தல் பிரச்சார படம். விஜய்யின் பிம்பத்தை உயர்த்தி ரசிகர்களை உசுப்பி விட்டு தன்னை தலைவனாக ஏற்றுக் கொள்ள தூண்டும் படம். வெளிவந்தால் விஜய்க்கு தான் லாபம். படம் வந்து பொதுமக்களை ஈர்க்கவில்லை என்பது வேறு விஷயம்.

விஜய் ஒரு கருத்தும் சொல்லாமல் ஆதவ் அர்ஜுனாவை விட்டு முருகன் மீதும் உதயநிதி மீதும் பழி போடுவது சரியா? திருட்டு வீடியோ தனிப்பட்ட பிரச்சனை அல்ல. திரையுலகம் சம்பந்தப்பட்ட பொது பிரச்சனை. அதனால் தான் ரஜினியும் கமலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றனர்.

படம் வெளியிட்டதில் விஜய்க்கும் பங்கிருக்குமானால் அவரும் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியப் பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்தும் சொல்வதைத் தவிர்க்கும் இப்படி ஒரு மௌனியைத் தமிழக அரசியல் கண்டதில்லை.

ரசிகர்கள் ஒரு ஆட்சியை கொண்டு வர முடியும் என்பது உண்மையானால் அந்த அரசு மௌன அரசாக அமைந்தால் தமிழர்களின் கதி? சரி, இப்பொழுதாவது மக்களவை தொகுதி மறுவரை அதன் தொடர்பான அச்சங்கள் பற்றி வாய் திறந்தது சரி. ஆனால் கூட்டாக சேர்ந்து குரல் குடுக்காமல் கடமைக்கு ட்வீட் மட்டும் போட்டால் சரி ஆகிவிடுமா?

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.