திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

Bigg Boss Kamal: பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தில் விஜய் டிவியின் டிஆர்பியை வேறு எந்த தொலைக்காட்சியினாலும் முந்த முடியாது. ஏனென்றால் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்கள் முதல் வெள்ளித்திரை ரசிகர்கள் வரை பிக் பாஸ் ரசிகர்களாக தான் இருந்து வருகிறார்கள். பொதுவாக பக்கத்து வீட்டு பிரச்சனை என்றாலே அதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும்.

இதையே தான் நிறைய கேமராக்கள் வைத்து பிக் பாஸில் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். போன வருடம் சில காரணங்களினால் பிக் பாஸ் தாமதமாக தொடங்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்கள்.

Also Read : வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

இப்போதைக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பியால் விஜய் டிவியின் டிஆர்பி மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் பிக் பாஸ் இன் காலதாமதத்திற்கு கமலும் ஒரு காரணமாம். அதாவது இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் கமல் பிஸியாக இருக்கிறார்.

ஆகையால் விஜய் டிவியும் அக்டோபர் மாதம் பிக் பாஸை தொடங்க இருக்கிறார்கள். ஆனால் இப்போது விஜய் டிவி டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை லாக் செய்துள்ளார்கள். அதாவது விஜய் டிவியில் நிறைய புத்தம் புது தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

இதில் கதாநாயகி தேர்வுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதில் கே எஸ் ரவிக்குமார் உடன் ராதிகாவும் நடுவராக பங்கேற்க இருக்கிறார். மேலும் இதற்கான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி பாக்யா, ஈரமான ரோஜா காவியா மற்றும் பாரதிகண்ணம்மா தொடர் கண்ணம்மா போன்ற கதாநாயகிகள் வேண்டும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் சொல்வது போல் கதாநாயகியை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என கே எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா பேசிக் கொள்கிறார்கள். பிக் பாஸ் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த மூன்று மாத இடைவெளியில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி தனது டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி பிளான் செய்துள்ளது.

Also Read : மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

Trending News