Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6.. ஹோஸ்ட்யை முதலில் தேர்வு செய்த விஜய் டிவி

சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6.. ஹோஸ்ட்யை முதலில் தேர்வு செய்த விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவந்த இந்நிகழ்ச்சியை சில காரணங்களால் அவரால் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவந்த இந்நிகழ்ச்சியை சில காரணங்களால் அவரால் இந்த சீசனை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்கள் ஆக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகும் போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பிரம்மிக்க செய்தார். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அதன் பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார்.

அப்போது சிம்புக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனால் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

தற்போது கமலின் விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி கமலஹாசனை தொடர்புகொண்டு பேசி உள்ளது. அப்போது கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால் கமல் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தொடர்ந்து கமல் படங்களிலும் கவனம் செலுத்த உள்ளார். இதனால் தற்போதே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்ட தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வர உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.